பள்ளத்தாக்கில் 'திடீரென' கவிழ்ந்த பஸ்... 'அலறித்துடித்த' பயணிகள்... சம்பவ இடத்திலேயே '25 பேர்' பலி... 62 பேர் படுகாயம்!
முகப்பு > செய்திகள் > உலகம்தென் ஆப்பிரிக்கா நாட்டில் பள்ளத்தாக்கில் திடீரென பேருந்து கவிழ்ந்த விபத்தில் 25 பேர் பலியாகினர்.
தென் ஆப்பிரிக்க நாட்டின் கிழக்கு கேப் மாகாணம் என்னும் இடத்தில் உள்ள பட்டர் ஒர்த் என்னும் நகரில் இருந்து ஹிபி என்னும் நகருக்கு நேற்று 80-க்கும் அதிகமான பயணிகளுடன் பேருந்து ஒன்று சென்றது. குவால்வினி என்னும் இடத்தை கடந்தபோது பேருந்து எதிர்பாராத விதமாக அங்கிருந்த பள்ளத்தாக்கு ஒன்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த கோர விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 25 பயணிகள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர். 62 பேர் காயமடைந்தனர். இந்த விபத்து குறித்து தகவலறிந்த மீட்புப்படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இந்த விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தென் ஆப்பிரிக்கா நாட்டில் கடந்த 2017-ம் ஆண்டு முதல் இதுவரை சுமார் 14 ஆயிரத்திற்கும் அதிகமான பேர் சாலை விபத்தில் இறந்துள்ளதாக சாலை போக்குவரத்து அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘மாற்றுத்திறனாளியை’ காப்பாற்றச் சென்றபோது... கண் ‘இமைக்கும்’ நேரத்தில் ‘காவலருக்கு’ ஏற்பட்ட பரிதாபம்... ‘குழந்தை’ பிறந்த சில நாட்களில் நேர்ந்த ‘துயரம்’...
- 'கண்ணுக்கு முன்னே மரண பயம்'... 'சுக்குநூறாக தெறித்த பைக்'... சென்னை டெலிவரி பாயின் திக் திக் நொடிகள்!
- ‘திடீரென’ தீப்பிடித்து எரிந்த தனியார் ‘பேருந்து’... தூங்கிக் கொண்டிருந்தபோது நிகழ்ந்த ‘கோர’ விபத்தால் ஏற்பட்ட ‘பரிதாபம்’...
- 'லீப் வருடத்தில் வந்த பிறந்த நாள்'...'சர்ப்ரைஸ் பண்ணலாம்னு இருந்தோமே'... பிறந்த நாளில் நடந்த சோகம்!
- ‘10 முறை பல்டி அடித்து பறந்து விழுந்த கார்’.. 4 பெண்கள் உட்பட 6 பேர் உடல் நசுங்கி பலியான சோகம்..!
- தாய், மனைவி, 2 குழந்தைகளுடன்... ‘ஒரே’ பைக்கில் ‘சுப’ நிகழ்ச்சிக்காக சென்றபோது... இளைஞரின் ‘அலட்சியத்தால்’ நேர்ந்த ‘கோர’ விபத்து...
- 'காட்டு வேலைக்கு போனாதான் சாப்பாடு'... 'அசுர வேகத்தில் வந்த கார்'... ஒரு நொடியில எல்லாம் போச்சு!
- 'அசுரவேகத்தில்' பேருந்தின் மீது மோதி 'இழுத்துச்சென்ற' ரெயில்... 'பதறித்துடித்த' பயணிகள்... சம்பவ இடத்திலேயே '20 பேர்' பலி... 60-க்கும் மேற்பட்டோர் படுகாயம்!
- ‘3-வது மாடியிலிருந்து உடைந்து விழுந்த ஜன்னல்’.. கீழே நின்ற +2 மாணவிக்கு நேர்ந்த சோகம்..!
- ‘சிறுவன்’ கண்முன்னே... ‘மொத்த’ குடும்பத்திற்கும் நேர்ந்த பயங்கரம்... கண் ‘இமைக்கும்’ நேரத்தில் நடந்து முடிந்த ‘துயரம்’...