பூமியில் விழுந்த 23 ஆயிரம் KG எடையுள்ள சீன பொருள்.. உயிரை கையில பிடிச்சுக்கிட்டு காத்திருந்த உலக நாடுகள்.. எங்க விழுந்தது..?

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

சீனா விண்ணில் ஏவிய ராக்கெட்டின் 23 டன் எடைகொண்ட உதிரி பாகங்கள் இன்று பூமியில் விழுந்திருக்கிறது. இதனை அமெரிக்க விண்வெளி கண்காணிப்பு துறை உறுதிப்படுத்தியுள்ளது.

Advertising
>
Advertising

Also Read | கன்று ஈனாமலேயே 24 நேரமும் பால் கறக்கும் தெய்வீக பசு.. ஆசிர்வாதம் வாங்கிச் செல்லும் பொதுமக்கள்..!

சர்வதேச விண்வெளி மையத்தை போலவே, தனக்கென சொந்தமாக விண்வெளியில் புது ஆய்வு நிலையத்தை கட்டும் பணியில் இறங்கியுள்ளது சீனா. இதற்காக சீனாவின் தெற்கே வென்சாங் பகுதியில் இருந்து, 23 ஆயிரம் கிலோ எடை கொண்ட Long March 5B ராக்கெட் கடந்த அக்டோபர் 31-ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. அதில், சீனாவின் கட்டுமான பணியில் உள்ள டியான்காங் விண்வெளி நிலையத்திற்கு தேவையான மெங்சியான் என்ற உபகரணங்களின் தொகுதி புவி வட்டபாதைக்கு அனுப்பப்பட்டது.

இந்நிலையில், இந்த  Long March 5B ராக்கெட்டின் பாகங்கள் இன்று பூமியில் விழும் என ஆராய்ச்சியாளர்கள் அறிவித்திருந்தனர். பொதுவாக ராக்கெட்டுகள் பூமியின் வளிமண்டலத்திற்குள் நுழைந்தால் அவற்றின் பூஸ்டர் பகுதிகள் கடலில் விழுமாறு கட்டுப்படுத்தப்படும். ஆனால், சீனாவின் இந்த Long March 5B ராக்கெட்டில் அதை செய்ய முடியாது. அதுதான் உலக நாடுகள் பலவற்றின் அச்சமாக இருந்தது.

சுமார் 108 அடி உயரமும், 23,000 கிலோகிராம் எடையும் கொண்ட இந்த ராக்கெட்டின் பாகங்கள் பூமியின் எந்த பகுதியில் வேண்டுமானாலும் விழலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. முன்னதாக கடந்த 2 ஆண்டுகளில் 3 முறை சீன ராக்கெட்டுகளின் உதிரி பாகங்கள் பூமியின் பல்வேறு இடங்களில் விழுந்திருந்தது. இந்நிலையில், இந்த ராக்கெட்டின் பாகங்கள் மத்திய அமெரிக்க பகுதியில் விழலாம் என ஆராய்ச்சியாளர்கள் கணித்திருந்தனர்.

இதனிடையே,  Long March 5B ராக்கெட்டின் முக்கிய பாகங்கள் பசிபிக் பெருங்கடலில் விழுந்திருப்பதாக அமெரிக்க ஸ்பேஸ் கமாண்ட் அதிகாரப்பூர்வாக அறிவித்திருக்கிறது. முன்னதாக இதுகுறித்து பேசியிருந்த அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான நாசாவின் நிர்வாகிகளில் ஒருவரான பில் நெல்சன்,"Long March 5B ராக்கெட் கட்டுப்பாடற்ற நிலையில் பூமியின் விழுவதன் மூலம் மீண்டும் சீனா பதற்றத்தை உருவாக்கியிருக்கிறது. பாதுகாப்பை அதிகப்படுத்தவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் ராக்கெட் பாகங்கள் பயணிக்கும் தகவல்களை சீனா வழங்கவில்லை" என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Also Read | வீட்டின் உள்பக்கமாக தாழிட்டுக் கொண்ட சிறுமி.. பதறிய பெற்றோர்.. சாதூர்யமாக செயல்பட்ட தீயணைப்பு அதிகாரிகள்..!

CHINESE ROCKET, DEBRIS, PACIFIC

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்