'கொரோனா' பீதியால் 'சிறையில்' கலவரம்... '23 கைதிகள்' சுட்டுக் கொலை... '30 போலீசார் படுகாயம்...'
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா பீதி காரணமாக கொலம்பியாவில் உள்ள சிறையில் கலவரம் வெடித்ததையடுத்து, 23 கைதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
மத்திய அமெரிக்க நாடான கொலம்பியாவில் கொரோனா வைரசின் தாக்கம் தீவிரமாக உள்ளது. அங்கு இதுவரை 231 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 2 பேர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் பரவுவதை தடுக்க அந்த நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. முதல்கட்ட நடவடிக்கையாக இன்று முதல் நாடு தழுவிய தனிமைப்படுத்தல் தொடங்குகிறது. இது 19 நாட்களுக்கு நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொதுமக்கள் அனைவரும் வீடுகளுக்குள்ளேயே இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அந்த நாட்டில் சிறைகளில் அளவுக்கு அதிகமான கூட்டம் இருப்பதோடு, சுகாதார நடவடிக்கைகளும் மோசமாக இருப்பதால் கைதிகளுக்கு கொரோனா வைரஸ் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதனை கண்டித்து நாடு முழுவதிலும் உள்ள 132 சிறைகளில் கைதிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அங்குள்ள சிறைகளில் பதற்றமான சூழல் நீடிக்கிறது.
இந்த நிலையில் தலைநகர் போகோடாவில் உள்ள நாட்டின் மிகப்பெரிய சிறையில் கைதிகள் நடத்திய போராட்டத்தின் போது திடீர் கலவரம் வெடித்தது. இதை பயன்படுத்தி கைதிகள் பலர் சிறையை உடைத்து தப்பி ஓட முயற்சித்தனர்.
இதையடுத்து சிறையில் கலவர தடுப்பு போலீசார் குவிக்கப்பட்டனர். அவர்களுடன் கைதிகள் பயங்கர மோதலில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
இதில் கைதிகள் 23 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 83 பேர் படுகாயம் அடைந்தனர். 30-க்கும் மேற்பட்ட போலீசாரும் படுகாயம் அடைந்தனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'கொரோனா வெறியாட்டம்...' 'பலியானோர் எண்ணிக்கை 15,372 ஆக அதிகரிப்பு...' 'உடனடி' தகவல்களை இந்த 'இணையதளத்தில்' காணலாம்...
- "மாப்ள அரைப்பாடி லாரியை புடிச்சாவது ஊரு வந்து சேரு..." "அதான் நேத்தே கைத்தட்டி கொரோனாவ விரட்டியாச்சே..." 'கோயம்பேட்டில்' குவிந்த 'திருவிழாக் 'கூட்டம்'...
- 'ஈரோட்டில்' வீடுகளில் முடக்கப்பட்ட '694 பேர்'... கைகளில் 'முத்திரை' குத்தப்பட்டிருக்கும் இவர்களை... வெளியில் 'பார்த்தால்' அரசுக்கு தெரிவிக்க அறிவுறுத்தல்...
- 'ஃபாரின் ரிட்டர்ன்' எல்லாம்... 'வீட்டுக்குள்ளேயே இருக்கனும்...' 'மீறினால் பாஸ்போர்ட் ரத்து...' வீடுகளில் 'ஸ்டிக்கர்' ஒட்டி 'கண்காணிப்பு'...
- 'தங்கத்தை பேப்பர்ல பாருங்க'... 'நியூஸ்ல பாருங்க'... ஆனா 'வாங்கனும்னு' ஆசைப் படாதிங்க...'31ம் தேதி' வரை... 'தமிழகம்' முழுவதும் 'நகைக்கடைகள்' மூடல்...
- 'கைத்தட்டி' பாராட்ட சொன்னா... 'ஊர்வலமா' போறாங்க... உங்கள வச்சுக்கிட்டு 'ஒண்ணும்' பண்ண முடியாது... 'சுய ஊரடங்கின்' நோக்கத்தையே 'சிதச்சுட்டாங்க'...
- 'வைரஸ்களை' அழிக்கும் 'செம்பு' பாத்திரங்கள்... 'கொரோனா' வைரஸை ஒழிக்கும் 'ஆயுதம்?...' 'ஆய்வாளர்கள்' அறிவுறுத்தல்...
- ஏன் அவசியம் இல்லாம வெளிய வரீங்க...? 'நாம இத அலட்சியமா நினைக்க கூடாது...' 'இதெல்லாம் ஒருநாள் மட்டும் இல்ல...' விழிப்புணர்வை ஏற்படுத்தும் போக்குவரத்து காவலர்...!
- ‘மூடப்படும் எல்லைகள் .. சென்னை உட்பட 3 மாவட்டங்களுக்கு லாக்டவுன்’.. 'ஊரடங்கு உத்தரவை மீறினா கடுமையான ஆக்ஷன்'!
- 'கொரோனா வைரஸ் காற்றில் பரவாது'... 'மருத்துவர்கள்' வெளியிட்ட 'ஆறுதலான' தகவல்... இந்திய 'மருத்துவ' ஆராய்ச்சி 'கவுன்சில்' 'அதிகாரப்பூர்வ' அறிவிப்பு...