22 போர் விமானங்களை களத்தில் இறக்கிய சீனா.. தைவான் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை.. பரபரப்பில் உலக நாடுகள்..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

தைவான் வான் பரப்பில் சீனாவின் 22 போர் விமானங்கள் அத்துமீறி நுழைந்துள்ளதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்திருக்கிறது. இது உலக அளவில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertising
>
Advertising

சீனா - தைவான் விவகாரம் இரண்டாம் உலகப்போர் முடிவடைந்த காலத்தில் இருந்து துவங்குறது. தன்னை தனி அரசியலைப்புடன் கூடிய நாடாக தைவான் கருதி வருகிறது. அதே வேளையில் சீனாவோ, தைவானை தன்னுடைய ஆட்சிக்குட்பட்ட பகுதியாகவே பார்க்கிறது. இப்படியான சிக்கலான சூழ்நிலையில் தான் நடந்து முடிந்திருக்கிறது நான்சி பெலோசியின் தைவான் சுற்றுப் பயணம். இது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் இதற்கு சீனா கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகிறது.

சீனாவின் எதிர்ப்பு

அமெரிக்க அதிபரான ஜோ பைடன் தைவான் விவகாரத்தில் அமெரிக்க அரசு உதவியாக இருக்கும் என கடந்த மாதம் தெரிவித்திருந்தது உலக நாடுகள் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில், அமெரிக்க நாடாளுமன்றத்தின் சபாநாயகர் நான்சி பெலோஸ், தனது ஆசிய சுற்றுப் பயணத்தில் தைவானையும் இணைத்துள்ளதாக அறிவித்தது மேலும் விஷயத்தை பெரிதாக்கியது. இதனை தொடர்ந்து தைவான் நாடாளுமன்றத்தில் நான்சி உரை நிகழ்த்தினார். அன்றே சீனா தனது ஆயுதப் படைகளை பயிற்சிக்கு அனுப்பி உலகையே அதிர வைத்தது.

போர் விமானங்கள்

இந்நிலையில், இன்று காலை தைவானின் வடக்கு, கிழக்கு மற்றும் மேற்கு கடல் பரப்பில் 11 பாலிஸ்டிக் ஏவுகணைகளை சீனா ஏவியதாக தைவான் பாதுகாப்பு துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது. இதனை தொடர்ந்து பெரும் படைகளை போர் ஒத்திகையில் ஈடுபடுத்தியது சீனா. இந்நிலையில், ஏவுகணைகளை தொடர்ந்து 22 போர் விமானங்களை தைவானின் வான் எல்லைக்குள் சீனா அனுப்பியுள்ளதாக தைவான் குற்றம் சுமத்தியுள்ளது.

நான்சி பெலோசியின் தைவான் பயணம் குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று அமெரிக்க தூதருக்கு சீனா சம்மன் அனுப்பியது. இந்நிலையில் திடீரென தைவான் எல்லைக்கு அருகில் படைகளை சீனா குவித்திருப்பதும், அவ்வப்போது தாக்குதல்களை மேற்கொள்வதாக தகவல்கள் வெளிவருவதால் உலக நாடுகள் பதற்றமடைந்துள்ளன.

TAIWAN, CHINA, USA, தைவான், சீனா, போர்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்