'மார்ச் முதல் டிசம்பர் வரை...' 'இந்தியாவில் பிறக்கப் போகும் குழந்தைகளின் மலைக்க வைக்கும் எண்ணிக்கை...' 'யுனிசெஃப் அமைப்பு எச்சரிக்கை...'
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனாவை சர்வதேச நோய் பரவலாக அறிவித்த கடந்த மார்ச் மாதம் முதல் வரும் டிசம்பர் வரையிலான காலத்தில் இந்தியாவில் 2.1 கோடி குழந்தைகள் பிறக்கும் என்றும், இந்த கால கட்டத்தில் மகப்பேறு பெண்களுக்கு உரிய மருத்துவ வசதி கிடைப்பதில் பெரும் தட்டுப்பாடு ஏற்படும் என்றும் யுனிசெஃப் அமைப்பு எச்சரித்துள்ளது.
தாய்மார்கள் தினம் வரும் 10ம் தேதி கொண்டாடப்பட இருப்பதையொட்டி ஐநா குழந்தைகள் நிதியமான (யுனிசெப்) ஒருஅறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதில் கொரோனா பாதிப்புள்ள மார்ச் 11 முதல் வரும் டிசம்பர் 16ம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் இந்தியாவில் அதிகபட்ச குழந்தைகள் பிறக்கும் என எச்சரித்துள்ளது.
உலகம் முழுவதும் மார்ச் முதல் டிசம்பர் வரையிலான காலத்தில் 11.6 கோடி குழந்தைகள் பிறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் இந்தியாவில் மட்டும் அதிகபட்சமாக 2.1 கோடி குழந்தைகள் பிறக்கும் எனக் குறிப்பிட்டுள்ளது.
இதேபோல் சீனாவில் 1.35 கோடி குழந்தைகளும், நைஜிரியாவில் 64 லட்சம் குழந்தைகளும், பாகிஸ்தானில் 50 லட்சம் குழந்தைகளும், இந்தோனேஷியாவில் 40 லட்சம் குழந்தைகளும், அமெரிக்காவில் 33 லட்சம் குழந்தைகளும் பிறக்கும் எனக் கூறியுள்ளது.
இந்த காலக்கட்டத்தில் பிறக்கும் குழந்தைகள் மற்றும் அவர்களை பெற்றெடுக்கும் தாய்மார்களுக்கு கிடைக்கும் மருத்துவ சேவை ஆபத்து நிறைந்ததாக இருக்கும் என்றும், போதுமான அளவுக்கு மருதுதவ உபகரணங்கள் மற்றும் செவிலியர்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் இருக்கும் என்றும் அந்த அமைப்பு எச்சரித்துள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ஒரே நாளில் இரண்டாவது கோரம்... ஆந்திராவைத் தொடர்ந்து இந்த மாநிலத்திலும் 'விஷ வாயு கசிவு'!.. அதிர்ச்சியில் பொதுமக்கள்!
- ‘சீனாவில் இருந்து கிளம்புறோம்’... ‘தூது அனுப்பும் இந்தியா’... ‘திசையை திருப்பும் அமெரிக்கா’!
- முதல் நாளே அட்டூழியம்!.. மது போதையில் கார்-ஐ தலைகுப்புற கவிழ்த்திய இளைஞர்கள்!.. பொதுமக்கள் கொந்தளிப்பு!
- தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்தது!.. வைரஸ் தொற்று வேமெடுத்தது எப்படி?
- ஊரடங்கால் கிராம மக்கள் பாதிப்பு!.. கோயில் நிர்வாகம் எடுத்த 'அதிரடி' முடிவு!.. மதுரையில் நெகிழ்ச்சி சம்பவம்!
- "2 கி.மீ நீளத்துக்கு குறையாத வரிசை!".. காலை 6 மணி முதலே.. சிறப்பு தரிசனம் போல் காத்திருந்த மதுப்பிரியர்கள்!
- "போன மாசமே வந்துட்டனே!".. கோயம்பேட்டில் லாரி ஏறி ஊருக்கு போன இளம் பெண்ணுக்கு கொரோனா!.. பரிசோதனை முடிவுக்கு காத்திருக்கும் 82 பேர்!
- 'சளி, காய்ச்சல் தானேன்னு தப்பா நினைச்சிட்டீங்க'... 'வல்லரசுகளுக்கு கொரோனா காட்டிய மரண பயம்'... தரவரிசையில் வந்த இந்தியா!
- 'தமிழக மக்களுக்கு குட் நியூஸ்'... 'ஊரடங்கு முடிந்ததும்'... 'அரசுப் பேருந்துகள் இயக்கம்'... 'முக்கிய விதிமுறைகள் வெளியீடு'!
- 'ஊரடங்கு' முடிந்தால் 'மகிழ்ச்சிதான்' ஆனாலும்... '93 சதவீதம்' ஊழியர்களுக்கு இருக்கும் 'பயம்'... ஆய்வு கூறும் 'தகவல்'...