66 பேரை பலிகொண்ட விமான விபத்து.. விமானி செஞ்ச இந்த காரியம் தான் எல்லாத்துக்கும் காரணம்.. வெளிவந்த பரபர அறிக்கை

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கடந்த 2016 ஆம் ஆண்டு உலகத்தையே உலுக்கிய எகிப்து ஏர் விமானம் விபத்துக்குள்ளானது எப்படி என்பது குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

Advertising
>
Advertising

பிரான்ஸ் தலைநகரம் பாரிஸிலிருந்து எகிப்தின் கெய்ரோ நகருக்கு கடந்த 2016 ஆம் ஆண்டு மே மாதம் கிளம்பியது ஏர்பஸ் ஏ320 விமானம். மத்திய தரைக்கடல் பகுதியிலுள்ள கிரேட் தீவிற்கு அருகே விமானம் செல்லும் போது மர்மமான முறையில் விபத்து ஏற்பட்டது. இந்த கோர விபத்தில் விமானத்தில் பயணம் செய்த எகிப்து நாட்டைச் சேர்ந்த 40 பேர் மற்றும் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 15 பேர், ஈராக் மற்றும் கனடா நாட்டைச் சேர்ந்த தலா இருவர் மற்றும் அல்ஜீரியா, பெல்ஜியம், பிரிட்டன், சாட், போர்ச்சுகல், சவுதி அரேபியா மற்றும் சூடான் ஆகிய நாடுகளை சேர்ந்த தலா ஒருவர் என மொத்தம் 66 பேர் இந்த விமான விபத்தில் இறந்ததாக அறிவிக்கப்பட்டது.

விமான விபத்து

2003 ஆம் ஆண்டு சேவைக்கு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த விமானம் 30 முதல் 40 ஆண்டு காலம் வரை பயன்படுத்தப்படலாம் என முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தது. விமான விபத்தன்று 37,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தபோது மர்மமான முறையில் விமானத்தில் விபத்து ஏற்பட்டது. இதனை அடுத்து விமானத்தின் கருப்பு பெட்டியை கண்டுபிடிக்க நிபுணர்குழு களத்தில் இறங்கியது. கிரீஸ் நாட்டின் ஆழ்கடல் பகுதியில் கிடந்த கருப்பு பெட்டியை நிபுணர்கள் மீட்டு ஆராய்ச்சியை துவங்கினர்.

இதுதான் காரணம்

நடுவானில் விமானி சிகரெட் பற்ற வைத்ததே இந்த விபத்திற்கு காரணம் என தற்போது தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. ஆரம்பத்தில் இது தீவிரவாதிகளின் தாக்குதலாக இருக்கலாம் என நம்பப்பட்ட நிலையில் எந்த தீவிரவாத இயக்கமும் இந்த செயலுக்கு பொறுப்பேற்கவில்லை. ஆனால் அதன் பிறகு விமானத்தின் கருப்பு பெட்டி கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து நடைபெற்ற ஆய்வில் விமானி சிகரெட் பற்ற வைத்ததே இந்த மோசமான விபத்திற்கு காரணம் என தற்போது தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

உலகையே உலுக்கிய 2016 ஆம் ஆண்டு எகிப்து ஏர் விமான விபத்திற்கு விமானியின் செயலே காரணம் என தற்போது தகவல்கள் வெளி வந்திருப்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

 

EGYPTAIR, FLIGHT, ACCIDENT, எகிப்துஏர், விமானம், விபத்து

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்