"அந்த லாட்டரியவா குப்பைதொட்டில போட போனேன்".. பரிசு கிடைக்காதுன்னு நெனச்சு பெண் எடுத்த முடிவு.. அடுத்த வினாடி வாழ்க்கையே மாறிப்போச்சு..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

அமெரிக்காவில் தான் வாங்கிய லாட்டரியை குப்பைத் தொட்டியில் வீச சென்ற பெண்ணுக்கு அதே டிக்கெட் மூலமாக 2 லட்சம் அமெரிக்க டாலர்கள் பரிசாக கிடைத்திருக்கிறது.

Advertising
>
Advertising

Also Read | கடலில் மிதந்த பாட்டில்... அதுக்குள்ள இருந்த ரகசிய செய்தி.. அதை படிச்சுட்டு எழுதியவரை தேடியலையும் நபர்.. திகைக்க வைக்கும் பின்னணி..!

லாட்டரி

அமெரிக்காவில் அரசு அனுமதியுடன் லாட்டரி டிக்கெட் விநியோகம் நடைபெற்று வருகிறது. தங்களது அதிர்ஷ்டத்தை பரிசோதிக்க விரும்பும் நபர்கள் இந்த லாட்டரிகளை வாங்கும் வழக்கத்தை கொண்டிருக்கிறார்கள். அதேநேரத்தில் சில சமயங்களில் விபத்து போல சில நபர்களுக்கு அதிர்ஷ்டம் அடிப்பதையும் பார்த்திருக்கிறோம். அதுபோலத்தான் நடந்திருக்கிறது ஜாக்குலின் லே என்பவரின் வாழ்க்கையிலும்.

அமெரிக்காவின் நார்த் கரோலினா மாகாணத்தை சேர்ந்தவர் ஜாக்குலின் லே. 60 வயதான இவர் அவ்வப்போது லாட்டரி டிக்கெட்களை வாங்குவது வழக்கம். அப்படி சமீபத்தில் உணவுப் பொருட்கள் வாங்க கடைக்குச் சென்ற ஜாக்குலின் 5 அமெரிக்க டாலர் கொடுத்து லாட்டரி டிக்கெட் ஒன்றை வாங்கியிருந்திருக்கிறார். உணவுப் பொருட்கள் மற்றும் லாட்டரியுடன் வீட்டுக்கு திரும்பிய ஜாக்குலின் அதன்பின்னர் தனது அன்றாட வேலைகளில் லாட்டரியை மறந்துவிட்டார். அடுத்தநாள் லாட்டரியை கண்ட அவர், தனக்கு பரிசு கிடைக்காது என நினைத்து அதனை குப்பைத் தொட்டியில் வீச நினைத்திருக்கிறார்.

மகிழ்ச்சி

அப்போதுதான், அந்த லாட்டரியை செக் செய்து பார்த்தால் என்ன? என்று அவருக்கு தோன்றியிருக்கிறது. இதனையடுத்து டிக்கெட்டை பரிசோதித்தவர் கொஞ்ச நேரத்தில் உரக்க கத்தி கூச்சலிட்டிருக்கிறார். அவரது சந்தோஷத்திற்கு காரணம் அவர் குப்பைத் தொட்டியில் வீச இருந்த லாட்டரி டிக்கெட்டிற்கு 2 லட்சம் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் 1.6 கோடி ரூபாய்) பரிசாக விழுந்திருக்கிறது. இதுகுறித்து பேசிய அவர்,"நான் உண்மையில் அதை தூக்கி எறியப் போனேன். ஆனால் அப்போதுதான் அந்த டிக்கெட்டிற்கு பரிசு விழுந்திருப்பதை பார்த்தேன். நான் உற்சாகமாக சத்தமிட்டேன். உடனடியாக எனது குடும்பத்தாரிடம் இதுகுறித்து தெரிவித்தேன். உண்மையாகவே உங்களுக்கு பரிசு கிடைத்துவிட்டதா? என ஆச்சர்யமாக எனது மகள் கேட்டாள். நான் இதுவரையில் எதிலும் வென்றதில்லை. இது கடவுளின் கொடை அன்றி வேறில்லை" என்றார்.

தனக்கு கிடைத்த பரிசுத் தொகையை கொண்டு கார் லோன் மற்றும் இதர கடன்களை அடைக்க இருப்பதாக ஜாக்குலின் தெரிவித்திருக்கிறார். இந்த சம்பவம் பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

Also Read | Weight-அ கொறச்சா போனஸ்.. ஆச்சர்யப்பட வைத்த CEO கொடுத்த முக்கியமான 5 அட்வைஸ்.. இத மட்டும் Follow பண்ணா போதுமாமே..!

LOTTERY, LOTTERY TICKET, TRASH

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்