'தனிமையில்' தத்தளிக்கும் கப்பல்... 2000 பேருக்கு 'ஐபோன்களை' இலவசமாக வழங்கிய அரசு... என்ன காரணம்?
முகப்பு > செய்திகள் > உலகம்டைமண்ட் பிரின்சஸ் (Diamond Princess) என்ற சொகுசு கப்பல் கடந்த மாதம் ஜனவரி 20-ம் தேதி ஜப்பானிலிருந்து புறப்பட்டு ஹாங்காங்குக்கு 25-ம் தேதி சென்றது. மீண்டும், ஹாங்காங்கிலிருந்து புறப்பட்டு பிப்ரவரி 3-ம் தேதி ஜப்பான் திருப்பியது. அந்த கப்பலில் பயணம் செய்த ஹாங்காங்கை சேர்ந்த 80 வயது முதியவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து கொரோனாவின் கோரத்தாண்டவத்திற்கு அவர் பலியானார். இதனால், ஜப்பான் வந்த கப்பல் யோகோஹமா துறைமுகத்தில் தனிமைப்படுத்தப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கிறது.
இந்த கப்பலில் கனடா, அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா என பிறநாட்டு மக்களும் இருக்கின்றனர். இதற்கிடையில் பயணிகள் உட்பட அந்த கப்பலில் உள்ள 3700 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 355 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து மேலும் 64 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியாகி உள்ளது. தற்போது மொத்தமாக 419 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர்.
இந்த நிலையில் கப்பலில் உள்ள சுமார் 2000 பேருக்கு ஜப்பான் அரசு ஐபோன்களை இலவசமாக வழங்கி இருக்கிறது. மருத்துவர்களுடன் தொடர்பில் இருக்கவும், மருந்துகள் குறித்த அறிவுறுத்தல்களை பெறுவதற்காகவும் லைன் ஆப் எனும் செயலி இன்ஸ்டால் செய்யப்பட்டு இந்த ஐபோன்கள் வழங்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘4 கேமரா, 128 ஜிபி ஸ்டோரேஜ்’!.. அசரவைக்கும் ‘பேட்டரி திறன்’.. புதுமாடல் ஸ்மார்ட்போனை வெளியிடும் பிரபல நிறுவனம்..!
- ‘ஒரு ஈ, காக்கா கூட இல்லாத எடத்துல டிராஃபிக்கா?’.. கூகுள் மேப்புக்கே விபூதி அடித்த வைரல் மனிதர்!
- ‘போதும் குடுங்க.. வாட்ஸ்ஆப்ல அனுப்பி வைக்கிறேன்!’ .. ‘செல்ஃபி எடுக்கும்போது செல்போனை தட்டிச்சென்று பறந்த திருடன்!’
- "அசுர வேகத்தில் டிஜிட்டல் மயமாகும் இந்தியா!"... "அமெரிக்காவை முந்தியது!"...
- “உன்ன கல்யாணம் பண்ணிக்கனும்னா...”... “காதலியிடம் காதலன் போட்ட கட்டளை”.. “அதிரடியாக கைது”!
- உலகின் 'நம்பர் 1' பணக்காரரின் மொபைலை ஹேக் செய்து... 'அந்தரங்க' புகைப்படங்களை... மனைவிக்கு அனுப்பிய இளவரசர்?
- VIDEO: ‘ஒரு கையில் செல்போன்’.. ‘மறுகையில் ஸ்டியரிங்’.. பயணிகள் உயிருடன் விளையாடிய டிரைவர்.. பரபரப்பு வீடியோ..!
- ‘எக்ஸாம் ஹாலில் நூதனமுறையில் காப்பி’.. ‘கையும் களவுமாக’ சிக்கிய இளைஞர்.. கடைசியில் நடந்த சோகம்..!
- “காலை 7-8 தான் மெயின் டைம்!”.. “வரிசையாக லேடீஸ் ஹாஸ்டலுக்குள் புகுந்து”.. “சென்னை நபர் செய்த தில்லாலங்கடித் தனம்”!
- ‘பேலன்ஸ் இல்லனாலும் ஃப்ரீயா கால் பண்ணலாம்’!.. பிரபல நெட்வொர்க் அதிரடி அறிவிப்பு..! குஷியில் வாடிக்கையாளர்கள்..!