ஒரே நாளில் கோடீஸ்வரர் ஆயிருக்கலாம்.. எனக்கு அப்படி ஒரு காசு தேவையில்ல.. நேர்மையாக உதறி தள்ளிய மனிதன்
முகப்பு > செய்திகள் > உலகம்லண்டன்: லண்டனில் இயங்கும் மின்சார நிறுவனத்தால் ஒரு நபருக்கு சுமார் 2 ட்ரில்லியன் பவுண்டுகளுக்கான காசோலை அனுப்பப்பட்ட சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
70 வயசுல சிங்கிளா இருந்தேன்.. இப்போ மிங்கிள் ஆயாச்சு.. காதலர் தினத்தில் வைரலாகி உள்ள 73 வயது பாட்டி
லண்டனில் கடந்த 2021-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஏற்பட்ட புயல் காரணமாக, மின்சாரம் தடைபட்டு, மக்கள் இருளில் தவித்து கடும் இக்கட்டிற்கு ஆளானார்கள். இதனை அரசின் சார்பாக அவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகிலேயே பணக்காரர்:
நம் ஊரில் எல்லாம் இழப்பீடு என வெறும் 500, 1000 என வழக்கப்படும். ஆனால், யார்க்ஷையரைச் சேர்ந்த கரேத் ஹியூஸ் என்பவருக்கு ஒரு காசோலையில் சுமார் 2 ட்ரில்லியன் பவுண்டு அதாவது 2,324,252,080,110 பவுண்டுகள் அனுப்பப்பட்டிருந்தது. இதனை மட்டும் கரேத் ஹியூஸ் வங்கியில் டெபாஸிட் செய்திருந்தால் அவர் தான் உலகிலேயே பணக்கார நபராக இருந்திருப்பார்.
இழப்பீட்டுக்கு நன்றி:
ஆனால், நேர்மையான மனதை கொண்ட கரேத் ஹியூஸ் இதில் ஏதோ தவறு நிகழ்ந்துள்ளது என்பதை புரிந்துகொண்டு தனது காசோலையை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். மேலும், அந்த மின்சார நிறுவனத்திடம், 'நாங்கள் பல நாட்கள் மின்சாரம் இல்லாமல் இருளில் தவித்தது உண்மைதான். நீங்கள் வழங்கிய இழப்பீட்டுக்கு நன்றி.
உறுதி செய்துகொள்ள முடியுமா?
ஆனால், நான் எனக்கு அளிக்கப்பட்ட காசோலையை வங்கியில் டெபாஸிட் செய்வதற்கு முன், உங்களால் இவ்வளவு பெரிய தொகையை வழங்க முடியுமா என்பதை உறுதி செய்துகொள்ள முடியுமா? நீங்கள் அனுப்பிய தொகையை கொஞ்சம் சரிபார்த்துக்கொள்ளுங்கள். ஏனென்றால், எங்கள் பகுதியிலேயே இப்படி பெரிய தொகையுடன் நான்கு பேருக்கு காசோலைகள் வந்துள்ளன' எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இதனை கவனித்த மின்சார நிறுவனமும் தன் தவறைப் புரிந்துகொண்டு உடனடியாக தான் அனுப்பிய காசோலைகளை மக்கள் காசாக்காமல் தடுக்க நடவடிக்கைகள் எடுத்துள்ளது.
இதேபோல 74 தவறான காசோலைகளை மின்சார நிறுவனம் அனுப்பியிருந்ததும் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. அத்துடன் நேர்மையாக தனக்கு வந்த காசோலை குறித்து தெரிவித்த வாடிக்கையாளர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொண்ட நிறுவனம், பின்னர் அவர்களுக்கான சரியான தொகையை அனுப்பி வைத்துள்ளது.
வொர்க் ஃப்ரம் ஹோம்ல கோடீஸ்வரன் ஆயிட்டேன்.. இது எப்படி சாத்தியமாச்சுன்னா.. அனுபவத்தை பகிர்ந்த இளைஞர்
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- நடுவானில் கேட்ட பெண்ணின் அலறல் சத்தம்.. விமானத்துல எல்லாரும் தூங்கிட்டு இருந்த நேரம் பார்த்து.. பயணி செய்த காரியம்
- நான் ஐபோன் தான் ஆர்டர் பண்ணினேன்.. ஆனா வந்தது அது இல்ல.. வந்த பொருளை நினைத்து 7 நாளா மன வருத்தத்தில் இருக்கும் பெண்
- மிஸ்டர் விஜய் மல்லையா இனிமேல் அந்த பங்களால நீங்க இருக்க முடியாது! குடும்பத்தோட வெளியேறிடுங்க.. லண்டன் நீதிமன்றம் அதிரடி
- சும்மா நின்னுட்டு இருந்தா போதும்.. டெய்லி 16,000 ரூபாய் சம்பாதிக்கும் இளைஞர்.. இப்படியும் ஒரு வேலையா!
- ‘அடுத்தவங்க இடத்துல குப்பைய கொட்டுனதும் இல்லாம’.. ‘உறைய வைத்த’ குப்பையில இருந்த அந்த ‘ஐட்டம்!’.. சிசிடிவி கேமரா இருக்குனு தெரிஞ்சும்.. ‘ஆப்பசைத்த குரங்கு’ கதையான சம்பவம்!
- '42 வருஷத்துக்கு அப்புறம் இது நடந்துருக்கு!'.. வெற்றிகரமாக நடந்த 'லண்டன்' மிஷன்!.. 'கெத்து' காட்டிய தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு!