காமன்வெல்த் போட்டியில் கலந்துகொண்ட 3 வீரர்கள் தப்பியோட்டம்.?.. உடனடியா எல்லா வீரர்களும் பாஸ்போர்ட்டை ஒப்படைக்க உத்தரவிட்ட கோச்.. முழுவிபரம்..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

பிரிட்டனில் நடைபெற்றுவரும் காமன்வெல்த் போட்டிகளில் கலந்துகொள்ள சென்றிருந்த இலங்கையை சேர்ந்த இரண்டு வீரர்கள் மற்றும் ஒரு மேலாளரை காணவில்லை என அந்நாட்டு குழு தெரிவித்திருக்கிறது. இது விளையாட்டு நிர்வாகத்தினரிடையே புதிய குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertising
>
Advertising

Also Read | சூடுபிடிக்கும் ராஜபக்சே சகோதர்களுக்கு எதிரான வழக்கு.. கறார் காட்டிய நீதிபதிகள்.. பரபரப்பில் இலங்கை..!

காமென்வெல்த் உறுப்பு நாடுகள் பங்கேற்கும் காமென்வெல்த் போட்டிகள் நான்கு வருடங்களுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது. இதில் 72 நாடுகள் பங்கேற்றுள்ளன. இதில் தடகளம், பேட்மின்டன், ஹாக்கி, குத்துச்சண்டை, பளு தூக்குதல், கிரிக்கெட் உள்ளிட்ட 19 போட்டிகளும், 8 பாரா விளையாட்டுகளும் இடம்பெற்றிருக்கின்றன. சுமார் 6,500 வீரர்கள் மற்றும் குழு நிர்வாகிகள் கலந்துகொண்ட இந்த ஆண்டின் காமன்வெல்த் போட்டிகள் பெர்மிங்காமில் கடந்த ஜூலை 28 ஆம் தேதி துவங்கியது.

இலங்கை அணி

ஒவ்வொரு விளையாட்டு போட்டிக்கும் பெர்மிங்காமை சுற்றியுள்ள தனித்தனி கிராமங்களில் மைதானங்கள் அமைக்கப்பட்டுள்ள. இந்நிலையில், இலங்கை அணியை சேர்ந்த ஜூடோ வீராங்கனை, மல்யுத்த வீரர் மற்றும் ஜூடோ மேலாளர் ஆகிய மூவரையும் காணவில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளது. இலங்கை ஜூடோ அணியில் மூன்று ஆடவரும் இரண்டு பெண் வீராங்கனைகளுக்கு இடம்பெற்றிருந்தனர். இதில் ஒரு வீராங்கனை தப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசாரணை

இதனையடுத்து, காமன்வெல்த் போட்டியில் பங்கேற்றுள்ள இலங்கை வீரர்கள் அனைவரும் தங்களது பாஸ்போர்ட்டை ஒப்படைக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து பேசிய இலங்கை அணியின் செய்தித் தொடர்பாளர் கோபிநாத் சிவராஜா," இந்த சம்பவத்திற்குப் பிறகு அனைத்து விளையாட்டு வீரர்களும் அதிகாரிகளும் தங்கள் பாஸ்போர்ட்டை அனைத்து கிராமங்களிலும் உள்ள அந்தந்த மைதான அதிகாரிகளிடம் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளோம். போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மூவரும் இங்கிலாந்து எல்லையை கடக்க முடியாது. உண்மையில் இது துரதிஷ்டவசமானது" என்றார்.

கடுமையான பொருளாதார சிக்கல்களை எதிர்கொண்டு வரும் இலங்கையில் இருந்து பொதுமக்கள் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு தப்பிச் செல்லும் நிகழ்வு அதிகரித்துவரும் நிலையில், காமன்வெல்த் போட்டியில் பங்கேற்க சென்றிருந்த இரண்டு வீரர்கள் மற்றும் ஒரு மேலாளர் காணாமல்போயிருப்பதாக தகவல் வெளியானது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Also Read | எடுத்த சபதத்தை நிறைவேற்றிய மும்பை இந்தியன்ஸ் வீரர்.. 9 வருஷத்துக்கு அப்பறம் அம்மாவை சந்தித்த மகன்.. நெகிழ்ந்துபோன ரசிகர்கள்..!

SRILANKA, SRI LANKAN, ATHLETES, POLICE INVESTIGATING, இலங்கை அணி

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்