ஜெயில் சுவத்துல மார்க்.. கச்சிதமா பிளான் போட்டு எஸ்கேப் ஆன 2 கைதிகள்.. சினிமாவை மிஞ்சிய சம்பவம்.. கடைசில போலீஸ் வச்ச ட்விஸ்ட்..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

அமெரிக்காவில் ஜெயிலில் இருந்து நூதனமான முறையில் தப்பிச் சென்ற இரண்டு கைதிகளை காவல்துறையினர் கைது செய்திருக்கின்றனர். ஆனால், அவர்கள் போலீசில் சிக்கிய விதம் தான் மொத்த அமெரிக்கா முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Advertising
>
Advertising

சிறை

அமெரிக்காவின் விர்ஜீனியா மாகாணத்தில் உள்ள சிறையில் தண்டனை காலத்தை கழித்து வந்தவர்கள் 37 வயதான ஜான் கார்சாவும் 43 வயதான ஆர்லி நெமோவும். இந்த சூழ்நிலையில் கடந்த திங்கட்கிழமை காலை வழக்கம்போல சிறையில் உள்ள கைதிகளின் கணக்கெடுப்பு நடந்திருக்கிறது. அப்போது ஜான் மற்றும் ஆர்லி இருவரையும் காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த சிறைத்துறை அதிகாரிகள் சோதனையிட்டதில் சிறையின் சுவரில் துளையிடப்பட்டிருப்பது தெரிய வந்திருக்கிறது. இதனால் காவல்துறை உயரதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டிருக்கிறது.

விர்ஜீனியா சிறையில் இருந்து இரு கைதிகள் தப்பித்த செய்தி உடனடியாக அந்த மாகாணம் முழுவதும் தீயாக பரவியிருக்கிறது. இதுகுறித்து தொலைக்காட்சி மற்றும் சோசியல் மீடியாவில் தகவல்கள் கொடுக்கப்பட்டு இவருடைய புகைப்படங்களையும் காவல்துறையினர் பகிர்ந்துள்ளனர்.

இதனிடையே சிறையில் இருந்து தப்பிச் சென்ற ஆர்லி மற்றும் நெமோ ஆகிய இருவரும் சிறையில் இருந்து 7 மைல் தொலைவில் உள்ள உணவகத்திற்கு சாப்பிட சென்றிருக்கின்றனர். பேன் கேக் ஆர்டர் செய்துவிட்டு இருவரும் பதட்டத்துடன் அமர்ந்திருக்கின்றனர். அப்போது, அந்த உணவகத்தில் இருந்த சிலர் இருவரையும் கண்டதும் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்திருக்கின்றனர். இதனால் அந்த உணவகத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் இருவரையும் கைது செய்திருக்கின்றனர்.

பிரஷ்

இதுகுறித்து அந்த மாகாண ஷெரிஃப் அளித்திருக்கும் தகவலின்படி ஆர்லி மற்றும் நெமோ ஆகிய இருவரும் பல் துலக்கும் பிரஷ் மற்றும் உலோக பொருட்களை பயன்படுத்தி சுவரில் துளையிட்டதாகவும், காவல்துறையினரின் நடவடிக்கையை கவனித்து இந்த திட்டத்தை செயல்படுத்தியிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். இந்த சம்பவம் அமெரிக்கா முழுவதும் பரபரப்புடன் பேசப்பட்டு வருகிறது.

USA, PRISON

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்