'டைமண்ட் பிரின்சஸ் கப்பலில் 2 பேர் உயிரிழப்பு...' '6 தமிழர்கள் உட்பட 138 இந்தியர்கள்...' 624 பயணிகளுக்கு கொரோனா வைரஸ்... !
முகப்பு > செய்திகள் > உலகம்ஜப்பானிய அரசால் தனிமைப்படுத்தப்பட்ட 'டைமண்ட் பிரின்சஸ்' என்ற சொகுசு கப்பலில் கொரோனா வைரஸ் தாக்கிய 2 பயணிகள் உயிரிழந்த சம்பவம் கப்பலில் உள்ள சக பயணிகளை மேலும் பீதியில் ஆழ்த்தியுள்ளது.
சுமார் 3,711 பயணிகளுடன் ஹாங்காங்கில் இருந்து ஜப்பான் சென்று கொண்டிருந்த சொகுசு கப்பலில் சில பயணிகளுக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டு அவதிக்குள்ளாகினர்.
சீனாவில் உருவான கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் கப்பலில் இருக்கும் பயணிகள் யாருக்காவது கொரோனா பாதிப்பு இருக்கும் என்ற அச்சத்தில் ஜப்பானிய அரசு சொகுசு கப்பல் துறைமுகத்திற்கு வந்து சேர தடைவிதித்தது. ஜப்பான் அரசின் சார்பாக ஒரு மருத்துவ குழு கப்பலுக்கு சென்று ஆய்வு நடத்தி 8 பயணிகளுக்கு கொரோனா வைரஸ் காய்ச்சலுக்கான அறிகுறிகள் இருப்பது தெரியவந்தது.
இதன் காரணமாக ஜப்பானில் கொரோனா பரவாமல் இருக்க துறைமுகத்திலிருந்து பல மைல் தூரத்திற்கு அப்பால் நடுக்கடலில் கப்பல் நிற்கும் என ஜப்பான் அரசு தெரிவித்திருந்தது. 6 தமிழர்கள் உள்பட 132 பணியாளர்கள் மற்றும் 6 பயணிகள் என மொத்தம் 138 இந்தியர்கள் அக்கப்பலில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது 'டைமண்ட் பிரின்சஸ்' கப்பலில் வைரஸ் தாக்கியுள்ள இருவர் உயிரிழந்த சம்பவம் கப்பலில் இருக்கும் சக பயணிகளை மேலும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. அங்கிருக்கும் பயணிகளுக்கு பல்வேறு மருத்துவ உதவிகள் செய்து வந்த நிலையிலும் இந்த உயிரிழப்பு சம்பவம் அங்கிருக்கும் பயணிகளை மேலும் மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளது.
ஜப்பானிய அரசால் தனிமைப்படுத்தப்பட்ட 'டைமண்ட் பிரின்சஸ்' என்ற சொகுசு கப்பலில் கொரோனா வைரஸ் தாக்கிய 2 பயணிகள் உயிரிழந்த சம்பவம் கப்பலில் உள்ள சக பயணிகளை மேலும் பீதியில் ஆழ்த்தியுள்ளது.
சுமார் 3,711 பயணிகளுடன் ஹாங்காங்கில் இருந்து ஜப்பான் சென்று கொண்டிருந்த சொகுசு கப்பலில் சில பயணிகளுக்கு தீடிரென காய்ச்சல் ஏற்பட்டு அவதிக்குள்ளாகினர்.
சீனாவில் உருவான கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் கப்பலில் இருக்கும் பயணிகள் யாருக்காவது கொரோனா பாதிப்பு இருக்கும் என்ற அச்சத்தில் முதலில் ஜப்பானிய அரசு சொகுசு கப்பல் துறைமுகத்திற்கு வந்து சேர தடைவிதித்தது. ஜப்பான் அரசின் சார்பாக ஒரு மருத்துவ குழு கப்பலுக்கு சென்று ஆய்வு நடத்தி 8 பயணிகளுக்கு கொரோனா வைரஸ் காய்ச்சலுக்கான அறிகுறிகள் இருப்பது தெரியவந்தது.
இதன் காரணமாக ஜப்பானில் கொரோனா பரவாமல் இருக்க துறைமுகத்திலிருந்து பல மைல் தூரத்திற்கு அப்பால் நடுக்கடலில் கப்பல் நிற்கும் என ஜப்பான் அரசு தெரிவித்திருந்தது. 6 தமிழர்கள் உள்பட 132 பணியாளர்கள் மற்றும் 6 பயணிகள் என மொத்தம் 138 இந்தியர்கள் அக்கப்பலில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது 'டைமண்ட் பிரின்சஸ்' கப்பலில் வைரஸ் தாக்கியுள்ள இருவர் உயிரிழந்ததாக ஜப்பானிய சுகாதார அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது. உயிரிழந்த இருவரை பற்றி இதுவரை எந்த தகவலும் வெளியிடப்படவில்லை மேலும் அவர்கள் 80 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்பட்ட நிலையில் விரைவில் அவர்களை பற்றிய விவரங்கள் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கப்பலில் இருக்கும் பயணிகளுக்கு பல்வேறு மருத்துவ உதவிகள் செய்து வந்த நிலையிலும் இந்த உயிரிழப்பு சம்பவம் அங்கிருக்கும் பயணிகளை அச்சத்திலும், மன உளைச்சலுக்கும் ஆளாக்கியுள்ளது. மேலும் கப்பலில் மொத்தம் 624 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பதாக தற்போது தெரியவந்துள்ளது.
மற்ற செய்திகள்
'தமிழகத்தில் 1000 கோடிக்கு மேல் சொத்து'... 'வெளியான கோடீஸ்வரர் லிஸ்ட்'... முதலிடம் பிடித்த மாவட்டம்!
தொடர்புடைய செய்திகள்
- பணத்துக்கே ‘திமிரு’ காட்டிய கொரோனா வைரஸ்...! ‘கரன்சியையும் விட்டு வைக்காத கொடூரம்...’அதிக வெப்பத்தில் எரிக்க உத்தரவு...!
- எப்படிடா 'இது' அங்க இருந்து சென்னைக்கு வந்துச்சு...! ‘ப்ளீஸ் எப்படியாச்சும் திருப்பி அனுப்பிடுங்க...’ 'அதுக்கு கொரோனா வைரஸ் இருக்கா..? இல்லையா...?' அதிர்ச்சி சம்பவம்...!
- பசிக்குதா..? 'பதில் சொல்ல இயலாமல் கலங்கும் காதல் மனைவி...' 'ஆசையாக ஊட்டியபின் அகமகிழும் கணவன்...' உள்ளத்தை உருக செய்யும் 'காதல்' காணொளி...!
- 'ரிமோட்' காருக்குள்ள எல்லாம் செட் பண்ணி வச்சாச்சு...! அது எப்படி கடைக்குப் போய் சாமான்களை வாங்கிட்டு வருது தெரியுமா...? 'ட்ரெண்டிங்' ஆகும் வீடியோ...!
- 'அய்யயோ..! எல்லாரும் ஓடுங்க, கொரோனா வைரஸ் வருது...!' ஹாயா ஜம்முன்னு உட்கார்ந்திட்டு இருக்கீங்களா, இப்ப பாருங்க...! பயணிகளை 'தெறிக்க' விட்ட நபருக்கு என்ன தண்டனை தெரியுமா...?
- 'அவங்களும் லீவ் இல்லாம வொர்க் பண்ணிட்டே இருக்காங்க, அதனாலதான்...' 'நர்ஸ் மாதிரி தான் நல்லாவே பார்த்துக்குறாங்க...!' கொரோனா தொற்று ஏற்படுவதால் நர்ஸ் ரோபோக்கள்...!
- 'ஆரம்பத்துல சொன்னதுக்காக புடிச்சு ஜெயில்ல போட்ருக்காங்க...' 'கொரோனாவ' முதல்ல கணிச்சவரே இவரு தான்...., இப்போ அவரோட நிலைமை என்ன தெரியுமா ...?
- நானும் 'அவர' கூட்டிட்டு சீனா போகப் போறேன்...! ‘சொந்தக்காரங்க யாருமே என் கல்யாணத்துக்கு வரல...’ கொரோனா போச்சுன்னா ‘குடும்பத்தோட’ இன்னொரு கல்யாணம்...!
- யாரா இருந்தாலும் எங்க 'மண்ணுல' கால் பதிக்க விட மாட்டோம்...! நடுக்கடலில் தவித்த 'வைர அரசி'.. கொரோனாவின் அட்டூழியம்...!
- குண்டூர் மிளகாய்க்கே கொடுத்த 'காரமான' நியூஸ்..! 'கொரோனா' வைரஸ்னா சும்மாவா...! தேஜாவுக்கும் சேர்த்து வைத்த ஆப்பு...!