'2 மில்லியன் மக்களின் போராட்டம்'.. 'நடுவில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்'.. வீடியோ!
முகப்பு > செய்திகள் > உலகம்2 மில்லியன் மக்களைக் கொண்ட போராட்டக் கூட்டம், ஆம்புலன்சுக்காக வழிவிட்டு ஒதுங்கி நின்ற வீடியோ இணையத்தில் காண்போரின் நெஞ்சை நெகிழ வைத்துள்ளது.
ஹாங்காங்கில், ‘வேறு நாட்டுக்குச் சென்று குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு நாடு திரும்புபவர்களை, அந்த நாட்டு கைதியாக நாடு கடத்தலாம்’ என்பதற்கான காண்ட்ராவெர்ஷியல் எக்ஸ்ட்ராடிஷன் என்கிற பெயரிலான சட்டத்திருத்தத்தை, சீனாவின் ஆதரவுடன் ஹாங்காங் தலைவர் கேரி லாம் கொண்டுவர முனைவதற்கு எதிரான போராட்டம் வெடித்துள்ளது.
இந்த சட்டத் திருத்தத்தால், வரி ஏய்ப்பு செய்தால் கூட நாடு கடத்தப்படும் நிலை உண்டாகும் என்பதால், ஏறக்குறைய 2 மில்லியன் மக்கள் வீதியில் இறங்கி போராடி வருவது உலக நாடுகளை ஆச்சரியத்தில் உறைய வைத்துள்ளது. மேலும் கேரி லாம் பதவி விலக வேண்டும் என்றும் அவர்கள் போராடி வருகின்றனர். போலீஸாரும் கண்ணீர்ப்புகைக் குண்டுகள் மற்றும் ரப்பர் புல்லட்டுகளைப் பயன்படுத்தி, கிளர்ச்சியாளர்களை கட்டுப்படுத்தி வந்தனர்.
இந்த போராட்டத்திற்காக பேனர்களைக் கட்டிய ஒருவர் மேலிருந்து தவறி கீழே விழுந்ததால், அங்கு பரபரப்பானது. அப்போது அவரை உடனடியாக ஏற்றிகொண்டு சிகிச்சைக்காக புறப்பட்ட ஆம்புலன்ஸ் கூட்டத்தின் திசையை குத்திக் கிழித்துக்கொண்டு வர, கடல் போன்ற அந்த 2 மில்லியன் மக்கள் கூட்டமும், நகர்ந்து கொடுத்து ஆம்புலன்ஸிற்கு வழி தந்து நெகிழ வைத்த சம்பவம் இணையத்தில் வீடியோவாக வலம் வருகிறது.
மற்ற செய்திகள்
'நாங்க எல்லாம் கரும் சிறுத்தை' ... 'எப்போமே Gun மாரி நிப்போம்'...'சென்னை பஸ் டே'யில் நடந்த விபரீதம்!
தொடர்புடைய செய்திகள்
- 'ஆம்புலன்ஸ் ஊழியர்களின் நேர்மையான மனசு'... குவியும் பாராட்டுகள்!
- ‘5 வயது சிறுவனை சுட்டுக் கொன்ற காவலர்..’ குடிபோதையில் நடந்த கொடூரம்..
- 'இஸ்லாம் டிரைவருக்காக' இந்து மேலதிகாரி செய்த மனதை நெகிழவைக்கும் காரியம்!
- இளம்பெண்ணை கத்தியால் குத்தி இளைஞர் கொன்ற வழக்கு: விருத்தாசலத்தில் வலுக்கும் மாணவர் போராட்டம்!
- நள்ளிரவில் ஆபத்தில் இருந்த தமிழ்ப்பெண்.. சைரனை அலறவிட்டு காப்பாற்றிய கேரள ஆம்புலன்ஸ் டிரைவர்!
- நோயாளியை ஏற்றிச் சென்ற 'ஆம்புலன்ஸ்'.. திடீர் தீ ஏற்பட்டதால் பரபரப்பு!
- 'விறுவிறுவென முன்சென்று.. ஆம்புலன்ஸ் வந்ததும் 4 ஸ்டெப் பின்னால் போய் வழிவிடும் அழகர்’.. வைரல் வீடியோ!
- உயிருக்கு போராடிய தேர்தல் அதிகாரி.. '45 நிமிஷம் போனில் கேட்டு முதலுதவி செய்த CRPF வீரர்'!
- ‘மூச்சு பேச்சின்றி’ இருந்த பச்சிளம் குழந்தை.. காவலர்கள் செய்த காரியத்தால் குவியும் பாராட்டுக்கள்!
- 'சிறு குழந்தைக்காக 'திரண்ட 'கேரளா'.. 'சல்யூட்' போடவைத்த முதல்வர்!