‘என்னாது ரெண்டு முலாம்பழத்தோட விலை இவ்வளவா’?.. ‘அப்படி என்ன ஸ்பெஷல் இருக்கு அதுல’?

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

இரண்டு முலாம் பழங்கள் 31 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய்க்கு ஜப்பான் நாட்டில் நடந்த ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளது.

ஜப்பானின் யுபாரி நகரிலுள்ள மொத்த விற்பனை சந்தையில் ஆரஞ்சு வண்ண சதைப்பகுதியுடைய முலாம்பழங்களின் ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்தில் சுமார் ஆயிரம் முலாம்பழங்கள் ஏலத்தில் எடுக்கப்பட்டது. இதில் இரண்டு முலாம்பழங்கள் மட்டும் வரலாறு காணாத விலைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டு சாதனை படைத்துள்ளது.

இந்நிலையில், இந்த இரண்டு முலாம் பழங்கள் மட்டும் இந்திய ரூபாயின் மதிப்பில் 31 லட்சத்து, 70 ஆயிரம் ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, இதற்கு விளக்கம் கூறிய ஏலம் நடத்துபவர்கள் ‘இனிப்பு சுவைமிக்க ஆரஞ்சு வண்ண சதைப்பகுதி மற்றும் உகந்த பருவநிலையில் விளைந்த பழங்களின் தரம் ஆகிய காரணங்களுக்காக இந்த வகை முலாம்பழங்கள் அதிக விலைக்கு ஏலம் போவது வழக்கம்’ என்று கூறியுள்ளார்.

மேலும், முலாம்பழங்கள் இவ்வளவு பெரிய தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டது இதுவே முதல் முறையாகும். இந்நிலையில், இந்த இரண்டு முலாம் பழங்களும் வரும் 29 ஆம் தேதி வரை மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

JAPAN, MELON, AUCTION, WORLD RECORD

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்