மிகவும் அரிதான "அதிர்ஷ்ட பிங்க் வைரம்".. ஏலத்துல மொத்த ரெக்கார்டையும் காலி பண்ணிடுச்சு.. யம்மாடி இவ்ளோ கோடியா?

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

பிரேசில் சுரங்கத்தில் வெற்றியெடுக்கப்பட்ட பிங்க் வைரம் ஒன்று ஜெனிவாவில் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டிருக்கிறது.

Advertising
>
Advertising

Also Read | "என்ன ஆனாலும் அதை மட்டும் நடக்கவிட மாட்டோம்".. இங்கிலாந்து கேப்டன் ஜாஸ் பட்லரின் பரபர பேச்சு.. என்னவாம்?

பூமிக்கடியில் அதிக அழுத்தத்தின் காரணமாக உருவாகும் வைரங்கள் இயற்கையாகவே அதிக கடினத்தன்மை கொண்டவையாகும். இவை பட்டை தீட்டப்பட்டு கோடிக்கணக்கான ரூபாய்களுக்கு விற்பனை செய்யப்பட்டுவருகின்றன. இவை புதைந்துள்ள மண்ணில் இருக்கும் ரசாயனங்களின் அடிப்படையில் இவற்றின் வண்ணமும் மாறுபடும். உதாரணமாக பிங்க், நீல நிற வைரங்கள் அதிகளவு விற்பனை செய்யப்படுகிறன்றன. இவற்றுள் பிங்க் நிற வைர கற்கள் அபூர்வமாக கருதப்படுகின்றன. அதன் காரணமாகவே அவற்றின் விலையும் கணிசமாக இருக்கின்றன.

இந்நிலையில், பிரேசில் நாட்டில் உள்ள சுரங்கங்களில் வெட்டியெடுக்கப்பட்ட பிங்க் நிற வைரம் தற்போது கிறிஸ்டி நிறுவனம் நடத்திய ஏலத்தில் விற்பனையாகி உள்ளது. பேரிக்காய் வடிவிலான 18 காரட் பிங்க் வைரமானது ஏலத்தில் 28.8 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு (இந்திய மதிப்பில் சுமார் 235 கோடி ரூபாய்) விற்பனையாகியுள்ளது.

அதிர்ஷ்ட பிங்க் வைரம் என்றும் அழைக்கப்படும் இந்த வைரம் கிறிஸ்டி நிறுவனத்தால் விற்பனை செய்யப்பட்ட சமீப வைரங்களிலேயே மிகவும் தனித்துவமானதாக கூறப்படுகிறது. இந்த வைரம் 25 மில்லியன் முதல் 35 மில்லியன் டாலர் வரை விற்பனையாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது 28.8 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு விற்பனையாகி அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது. இருப்பினும் இந்த வைரத்தை ஏலத்தில் வாங்கிய ஆசியாவை சேர்ந்த நபர் தனது அடையாளத்தை வெளிப்படுத்த வேண்டாம் என நிறுவனத்திடம் கூறியுள்ளதாக தெரிகிறது.

இதுபற்றி பேசிய ஜெனிவாவில் உள்ள கிறிஸ்டி நிறுவனத்தின் நகைத் துறையின் தலைவர் மேக்ஸ் ஃபாசெட், "வலுவான, பிங்க் நிறத்துடன் கூடிய இந்த வைரக்கல் 15 ஆண்டுகளுக்கு முன்பு பிரேசிலில் வெட்டப்பட்டது. இது இயற்கையின் உண்மையான அதிசயம்" என்றார்.  மேலும், 16 ஆம் நூற்றாண்டில் இந்தியாவில் உள்ள கோல்கொண்டா சுரங்கங்களில் பிங்க் நிற வைரக்கற்கள் முதலில் வெட்டியெடுக்கப்பட்டதகவும் பின்னர், ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, பிரேசில் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளில் இந்த தொழில் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்திருக்கிறது கிறிஸ்டி நிறுவனம்.

தற்போது விற்பனையாகியுள்ள இந்த பிங்க் வைரம் ஜெனிவாவிற்கு வருவதற்கு முன்பு நியூயார்க், ஷாங்காய், சிங்கப்பூர் மற்றும் தைவான் ஆகிய இடங்களில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்ததாக அந்நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

Also Read | "என்னை மன்னிச்சிடுங்க.. ஆனா வேற வழியில்லை".. 11,000 மெட்டா ஊழியர்களுக்கு மார்க் அனுப்பிய கடிதம்.. கலங்கிப்போன பணியாளர்கள்..!

PINK DIAMOND, GENEVA AUCTION, SOLD

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்