2022-ல் இத்தனை துன்பங்கள் வர போகுதா? '2021-க்கே பாடி தாங்கல' பிரெஞ்சு ஜோதிடர் முன்கூட்டியே கணித்துள்ள அதிர்ச்சி தகவல்கள்
முகப்பு > செய்திகள் > உலகம்2022-ம் ஆண்டு என்ன நடக்கும் என ஒவ்வொரு நாட்டில் உள்ளவர்களும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டுள்ளனர்.
நோஸ்ட்ராடாமஸின் கணிப்புகள் அடங்கிய புத்தகம் 'லெஸ் ப்ரொபிடிஸ்' , 1555 -ஆம் வருடம் வெளியானது.
சிறுகோள்
பிரஞ்சு ஜோதிடர் நோஸ்ட்ராடாமஸின் கணிப்புகளின்படி, 2022-ஆம் ஆண்டில் பூமியின் மீது ஒரு சிறுகோள் மோத வாய்ப்புள்ளது. அதுமட்டுமல்லாமல் உலகம், வெள்ளம் மற்றும் வறட்சியால் பாதிக்கப்படும்.
மேலும், பணவீக்கம் மிகவும் அதிகரிக்கும், நிறைய மக்கள் பட்டினியால் பாதிக்கப்படுவார்கள்.
புவி வெப்பமடைதல்
புவி வெப்பமடைதல் மற்றும் சிறுகோள்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு AI (Artificial Intelligence) தொழில்நுட்பத்தின் எழுச்சி ஆகியவற்றால் ஏற்படும் பேரழிவுகளை நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே நோஸ்ட்ராடாமஸ் கணித்து விட்டதாக கூறப்படுகிறது.
அழிவின் தீர்க்கதரிசி
'அழிவின் தீர்க்கதரிசி' என்று வர்ணிக்கப்படும், பிரெஞ்சு ஜோதிடர் நோஸ்ட்ராடாமஸ் கணிப்புகள் 400 ஆண்டுகளுக்கும் மேலாக நம்பப்பட்டு வருகிறது. உலக வெப்பமயமாதல் காலநிலை மாற்றம் மிகவும் மோசமாக இருக்கும், உயரும் வெப்பநிலையால் கடலில் உள்ள மீன்களை 'பாதி வெந்துபோகும்' என்றும் தெரிவித்துள்ளார்.
மழை
கடைசியாக, மனிதகுலம் 40 வருடங்களுக்கு மழையைப் பார்க்காது என்றும் கணித்துள்ளார். ஆனால், பல வருடங்களாக மழை வரவேண்டும் என்று வேண்டியவர்களே வெள்ளத்தால் ஏற்படும் அபாயத்தையும் அனுபவிக்க நேரிடும் என்றும் நோஸ்ட்ராடாமஸ் தனது நூலில் எழுதியுள்ளார்.
அதுமட்டுமல்லாமல், நாற்பது வருடங்களாக வானவில்லையே பார்க்காமல் வறண்டிருக்கும் பூமியில் மழை பெய்யத் தொடங்கினால், உலகமே காணாத வெள்ளமாய் அது கொட்டித் தீர்க்கும் என்பதும் உச்சக்கட்ட பயத்தை ஏற்படுத்துகிறது.
வெள்ளம்
சமீப ஆண்டுகளாக உலகம் ஏற்கனவே அழிவுகரமான வெப்ப அலைகள், வெள்ளம் மற்றும் வறட்சியைக் கண்டுள்ளது, இயற்கை பேரழிவுகள் தீவிரமானதாக மாறும் என்று ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை விடுத்துள்ளது.
சிறுகோள் பூமியைத் தாக்க போகிறது என்று கூறும் நோஸ்ட்ராடாஸ், இதனால் மிகப்பெரிய அளவில் பொதுமக்களின் மரணம் ஏற்படும் என்று கணித்துள்ளார்.
ஆனால், இந்த தாக்குதல் எப்போது நிகழும் என்பது துல்லியமாக தெரியவில்லை, ஆனால் வானத்திலிருந்து ஒரு 'பெரிய நெருப்பு' விழும் என்று அவர் எழுதியுள்ளார். பூமியுடனான சிறுகோள் மோதலால், தீ மற்றும் பேரழிவு கண்டிப்பாக ஏற்படும்.
பஞ்சம்
மேலும், கோதுமையின் விலை மிகவும் அதிகமாக இருக்கும், இதனால் பஞ்சம் நிலவும் என கூறுகிறார், இதன் காரணமாக மனிதன் விரக்தியில் மூழ்கிவிடுவான் என்றும், தவறுகளில் இருந்து மனிதகுலம் ஒருபோதும் கற்றுக்கொள்ளாது, விலைவாசிகள் தொடர்ந்து உயரும் என்று கூறியுள்ளார்.
செயற்கை நுண்ணறிவு
செயற்கை நுண்ணறிவின் எழுச்சியை நோஸ்ட்ராடாமஸ் கணித்ததாகத் தெரிகிறது. கடந்த நூற்றாண்டில் தொழில்நுட்பம் வெகுவாக வளர்ச்சியடைந்துள்ளது, எதிர்காலத்தில் என்ன மாதிரியான வளர்ச்சிகள் நடக்கும் என்பதை அறிவது கடினம், ஆனால் AI தொழில்நுட்பத்தின் எழுச்சி மூலம் மனிதர்கள் 'அழியாதவர்களாக' இருப்பார்கள் என்று நோஸ்ட்ராடாமஸ் அந்த நூலில் கூறியுள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 2022-ல 'பெரிய_ஆபத்து' காத்திட்டு இருக்கு...! முன்கூட்டியே 'கணித்துள்ள' பாபா வங்கா பாட்டி...! -
- ரஜினி கட்சி ஆரம்பிக்கலைனா ‘ஜோதிட’ தொழிலை விட்றேன்னு சொன்னீங்க..! நெட்டிசன்கள் ‘சரமாரி’ கேள்வி.. ஜோதிடர் ‘ஷெல்வி’ பரபரப்பு பேட்டி..!
- ‘என் பொண்டாட்டிய வேலைக்கு வைக்காத’!.. கண்டித்த கணவன்.. சென்னை ஜோதிடருக்கு நடந்த கொடூரம்..!
- 'உலகக்கோப்பை வெற்றியை சரியாக கணித்த 'ஜோதிடர்'... 'தோனி'யின் ஓய்வு குறித்து பரபரப்பு தகவல்'!