கடலில் மூழ்கிய கப்பல்.. கப்பலில் கிடைத்த 165 வருச பழைய ஜீன்ஸ் பேண்ட்!!.. இவ்ளோ ரூபாய்க்கு ஏலத்துல போயிருக்கா?

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

முன்பொரு காலத்தில் நிலக்கரி சுரங்களில் பணியாற்றும் நபர்களுக்காக ஜீன்ஸ் பேண்ட்கள் உருவாக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது உலக அளவில் ட்ரெண்ட் ஆன ஒரு உடையாகவும் வலம் வருகிறது.

Represent Image  © Copyright to their respect Owners.

Advertising
>
Advertising

ஜீன்ஸ் பேண்ட்டில் பல விதமாக, மாடல் மாடலாக ஒருவரின் ரசனைக்கு ஏற்ப வகையில் நாளுக்கு நாள் தயார் செய்யப்பட்டும் வருகிறது.

இந்த நிலையில், சுமார் 160 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த ஜீன்ஸ் பேண்ட் கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில்; அது ஏலம் போன தொகை பலரையும் திக்கு முக்காட வைத்துள்ளது.

அமெரிக்காவின் வடக்கு கரோலினா பகுதியில், கடலில் மூழ்கிய கப்பல் ஒன்றை ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் கண்டுபிடித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது. மேலும், அவர்கள் கண்டுபிடித்த இந்த கப்பல், கடந்த 1857 ஆம் ஆண்டு சான் பிரான்சிஸ்கோவில் இருந்து நியூயார்க்கிற்கு பனாமா வழியாக சென்று கொண்டிருந்த போது புயலில் சிக்கி கடலில் மூழ்கியதாகவும் சொல்லப்படுகிறது.

அப்போது, அந்த கப்பலுக்குள் பெரிய அளவில் சேதம் அடையாத வெள்ளை நிற ஜீன்ஸ் பேண்ட் ஒன்றை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிக்கவும் செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது. சுமார் 165 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த ஜீன்ஸ் பேண்ட், கடந்த வாரம் ஏலத்தில் விடுக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

இத்தனை ஆண்டுகள் பழமை வாய்ந்த ஜீன்ஸ் பேண்ட், தற்போது ஏலத்தில் யாரும் எதிர்பாராத வகையில், சுமார் 1 லட்சத்து 14 ஆயிரம் அமெரிக்க டாலர்களுக்கு (இந்திய மதிப்பில் சுமார் 94 லட்சம் ரூபாய்) ஏலம் போனதாக தகவல்கள் கூறுகின்றது. 1857 ஆம் ஆண்டு மூழ்கிய கப்பலில், இந்த ஜீன்ஸ் பேண்ட் இருந்ததால் எந்த நிறுவனம் இதனை உருவாக்கியது என்பது குறித்த தகவல், சரிவர தெரியவில்லை.

உலகிலேயே பழமையான ஜீன்ஸ் பேண்ட்டாக இது கருதப்படும் நிலையில், இதை உருவாக்கியது யார் என்பதை அறியவும் பலரும் ஆவலாக உள்ளனர்.

JEANS PANT, AUCTION

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்