'குண்டு' வெடிக்குறதுக்கு கொஞ்சம் முன்னாடி... 'நாங்க காபுல் ஏர்போர்ட்-க்கு வந்தோம்...' 'அப்போ ஒரு சம்பவம் நடந்துச்சு...' 'அது மட்டும் நடக்கலன்னா...' - கதறும் இந்தியர்கள்...!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

நேற்று (26-08-2021) ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறுவதற்காக 160 இந்துக்கள் மற்றும் ஆப்கான் சீக்கியர்கள் காபூல் விமான நிலையத்தை நோக்கி வந்துள்ளனர்.

அப்போது, அவர்களை உள்ளே விடாமல் தாலிபான்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர். இதனால் அவர்களால் உடனடியாக நாடு திரும்ப முடியவில்லை. ஆனால், அவர்கள் விமான நிலையம் வராததால் நேற்றைய தாக்குதலில் இருந்து தப்பித்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேற வேண்டாம். வெகு சீக்கிரம் அமையவுள்ள இஸ்லாமிக் எமிரேட்ஸ் ஆஃப் ஆப்கானிஸ்தான் அரசுக்கு அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும் என்று தாலிபான்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். இந்த நிலையில், நேற்று (26-08-2021) விமான நிலையத்துக்கு வரவிடாமல் இந்துக்கள், சீக்கியர்கள் அடங்கிய 160 பேரை தாலிபான்கள் தடுத்துள்ளனர்.

அவர்களை மீட்பதற்காக சென்ற விமானப் படை விமானமும் காபூல் விமான நிலையத்திலேயே காத்திருந்தது. 160 பேரும் குருத்வாரா ஒன்றில் பத்திரமாக இருப்பதாக டெல்லி சீக்கிய குருத்வாரா அமைப்பின் தலைவர் மன்ஜீந்தர் சிங் சிர்ஸா கூறியுள்ளார்.

இதுவரை, ஆப்கானிஸ்தானில் இருந்து மொத்தம் 565 பேரை இந்தியா மீட்டுள்ளது. இவர்களில் 175 பேர் தூதரக அதிகாரிகள், 263 பேர் இந்திய குடிமக்கள், 112 பேர் ஆப்கானை சேர்ந்த மக்கள்.

விமான நிலையத்துக்கு செல்லும் வழியில் ஏகப்பட்ட புதிய சோதனைச் சாவடிகளை உருவாக்கியுள்ளனர். அதில், பல்வேறு ஆயுதம் ஏந்திய குழுக்கள் தடுத்து நிறுத்துவதாலேயே மக்களை அங்கிருந்து மீட்பதில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்