சீனப் 'பனிப்பாறைகளில்' நடந்த ஆராய்ச்சி...! 15 ஆயிரம் வருஷமா 'அது' அழியாம இருந்துருக்கு...! - ஆய்வில் வெளிவந்த 'அதிர' வைக்கும் தகவல்...!
முகப்பு > செய்திகள் > உலகம்இப்போதெல்லாம் தினம் ஒரு வைரஸ் என்ற கணக்கில் புதிது புதிதாக வைரஸ்கள் கிளம்பிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் 15 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய வைரஸ்களை திபெத்திய பனிப்பாறைகளில் இருந்து விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
சீனப் பகுதியில் உள்ள கடல்மட்டத்தில் இருந்து 22 ஆயிரம் அடி உயரத்தில் உள்ள திபெத்திய பனிப்பாறைகளில் கடந்த 2015-ஆம் ஆண்டு ஓஹியோ மாகாண பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகள் பனிப்பாறைகள் குறித்த ஆராய்ச்சியை மேற்கொண்டிருந்தனர்.
மேற்குப்பகுதிகளில் சேகரிக்கப்பட்ட 2 பனிப்பாறைகளில் 15 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய வைரஸ்கள் இருந்தது தற்போது கண்டறியப்பட்டுள்ளது.
பொதுவாகவே பனிப்பாறைக்குள் வைரஸ்கள் நீண்ட காலமாக இருக்கும் என்பதால் இத்தனை ஆண்டுகளாகியும் வைரஸ்கள் அழியாமல் இருந்துள்ளது தெரியவந்துள்ளது. அதோடு, ஆராய்ச்சி குழுவின் தலைமை விஞ்ஞானியும், நுண்ணுயிரியல் பேராசிரியருமான ஜி பிங் ஜாங் பனிஅடுக்குகளில் தூசுக்கள், வாயுக்கள் மற்றும் வைரஸ்கள் புதைந்திருந்ததாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வெளியிடுபட்டுள்ள அறிக்கையில், சோதனை மூலம் கண்டறியப்பட்ட வைரஸ்களில் 4 ஏற்கெனவே அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், 33 வைரஸ்களுக்கான மரபணு குறியீடுகள் பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் வைரஸ்களின் பரிணாம மாற்றம் குறித்து அறிந்துகொள்ள முடியும் என ஆய்வுக்குழு தெரிவித்துள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- சீனாவில் இருந்து அடுத்த அபாயம்!.. குரங்குகளை தாக்கும் விநோத வைரஸ்... மனிதருக்கு பரவியது!.. ஒருவர் உயிரிழப்பு!!
- ‘தடுப்பூசி வந்தா எல்லாம் முடிஞ்சிடும்னு நினைச்சா’.... ‘ஆக்ஸ்ஃபோர்டு விஞ்ஞானி’ கூறும் ‘பகீர்’ தகவல் வயிற்றில் ‘புளியைக் கரைக்குதே!’
- ‘கொரோனாவுக்கு முற்றுப்புள்ளி’... ‘தடுப்பூசி போடும் பணியை துவங்கிய நாடு’... ‘இவங்களுக்கு தான் பர்ஸ்ட்’... ‘வாழ்த்து சொல்லி அதிபர் ட்வீட்...!!!
- 'அடுத்த வைரஸோட பேரு சப்பரே...' 'இது எந்த நாட்டுல கண்டு பிடிச்சிருக்காங்க...? - ஆராய்ச்சியாளர்கள் தரும் எச்சரிக்கை தகவல்கள்...!
- 2020ம் ஆண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிப்பு!.. எதற்காக வழங்கப்படுகிறது?.. விருது பெறுபவர்கள் யார்?
- 'இனி தைரியமா ஆபீஸ் போகலாம்...' 'அலுவலகங்களின் பாதுகாப்பிற்காக அறிமுகமாகும் பேக் டூ வொர்க் செயலி...' - அப்படி என்ன இதன் சிறப்பம்சங்கள்...?
- 'கொரோனாவ விட கொடிய நோய் இந்த நாட்டுல இருக்கு...' 'இதைவிட மூணு மடங்கு ஸ்பீடா பரவுது...' - சீனா கடும் எச்சரிக்கை...!
- 'சீனாவில் பரவும் அடுத்த வைரஸ்...' 'இது கொரோனாவ விட செம ஸ்பீடா ஆள காலி பண்ணிடும்...' - உலக சுகாதார நிறுவனம் அறிவிப்பு...!
- "பனி உருகுவதற்குள்ள... சீக்கிரமா கவர் பண்ணுங்க!".. பிரம்மாண்ட தார்பாலின் ஷீட்டுகளால் அவசர அவசரமாக மூடப்படும் பனிப்பாறைகள்!
- 'தமிழகத்தில்' பரவும் 'தீவிரத்தன்மை' கொண்ட... 'புதிய வகை' கொரோனா வைரஸ்... இது 'வூகானிலிருந்து' பரவியது இல்லை...