5 நாள் தானடா 'ஸ்ட்ரைக்' பண்ணோம்... அதுக்குள்ள இத்தனை 'கொலையா?...' 'போலீஸ்' மட்டும் இல்லைன்னா...' உறைய' வைக்கும் 'அதிர்ச்சித்' தகவல்...

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

பிரேசிலில் ஊதிய உயர்வு கோரி, போலீசார் 5 நாட்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட நேரத்தில், 147 கொலைச் சம்பவங்கள் நடந்துள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

பிரேசிலின் வடகிழக்கு பகுதியில் உள்ள சியாரா மாகாணத்தை சேர்ந்த போலீசார் தங்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வலியுறுத்தி கடந்த 19ம் தேதி முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்நாட்டு சட்டப்படி போலீசார் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது சட்டப்படி குற்றமாகும். சட்டத்தையும் மீறி போலீசார் தொடர்ந்து வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டதால் அவர்கள் மீதான வழக்கு மாகாண நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இதில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட காவலர்கள் பணிக்குத் திரும்பாவிட்டால் சிறை தண்டனையை எதிர்கொள்ள நேரிடும் என எச்சரிக்கப்பட்டது. மேலும், அனைவரையும் பணி நீக்கம் செய்யவும் உத்தரவிட்டது. இருப்பினும் போலீசார் போராட்டத்தை கைவிட மறுத்து தொடர்ந்து போராடி வருகின்றனர்.

இதனிடையே போலீசாரின் வேலை நிறுத்த போராட்டத்தால் சியாரா மாகாணத்தில் குற்றச்சம்பவங்கள் அதிகரித்துள்ளன. கடந்த 5 நாட்களில் மட்டும் 147 கொலைகள் நடந்துள்ளதாக மாகாண அரசு தெரிவித்துள்ளது.  நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் துப்பாக்கிகளை ஏந்தியபடி வீதிகளில் ரோந்துப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.

BRAZIL, POLICE, PROTEST, 147 MURDERS

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்