‘அனுமதியளித்த ஒரே வாரத்தில்’... ‘இத்தனை லட்சம் பேருக்கு’... ‘கொரோனா தடுப்பூசி செலுத்தி அதிரடி காட்டும் நாடு’...!!!
முகப்பு > செய்திகள் > உலகம்இங்கிலாந்தில் லட்சக்கணக்கானோருக்கு ஒரு வாரத்தில் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் ஃபைசர் நிறுவனமும், ஜெர்மனியின் பயோஎன்டெக் நிறுவனமும் இணைந்து உருவாக்கிய கொரோனா தடுப்பூசி 95 சதவிகிதம் செயல் திறன் கொண்டது என தெரியவந்தது. இந்த தடுப்பூசி கொரோனா வைரசை தடுப்பதில் முக்கிய பங்காற்றும் என தெரிவிக்கப்பட்டது.
இதையடுதது இந்த கொரோனா தடுப்பூசியை இங்கிலாந்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர ஃபைசர் நிறுவனம் அனுமதி கேட்டு விண்ணப்பித்திருந்தது. அந்த விண்ணப்பத்தையடுத்து இங்கிலாந்தில் ஃபைசர் தடுப்பூசியை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர அந்நாட்டு அரசு அனுமதியளித்தது.
இதையடுத்து, இங்கிலாந்து முழுவதும் கடந்த 8 ஆம் தேதி ஃபைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. முதல்கட்டமாக கொரோனா தடுப்பு பணியில் உள்ள மருத்துவ ஊழியர்களுக்கு, வயதானோருக்கும் தடுப்பூசி செலுத்துவதில் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 8-ம் தேதி தடுப்பூசி போடும்பணி தொடங்கப்பட்ட நிலையில் முதல் வாரத்தில் எத்தனை பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்ற தகவலை இங்கிலாந்து சுகாதாரத்துறை வெளியிட்டது.
அந்த தகவலின்படி இங்கிலாந்தில் டிசம்பர் 8-ம் தேதி முதல் டிசம்பர் 16 வரை 7 நாட்களில் மொத்தம் 1 லட்சத்து 37 ஆயிரம் பேருக்கு ஃபைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தடுப்பூசியின் முதல் டோஸ் தற்போது போடப்பட்டுள்ளவர்கள், தடுப்பூசியின் 2-வது டோஸ்-ஐ 21 நாட்களுக்கு பின்னர் போட்டுக்கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ஐஐடி, அண்ணா பல்கலைக்கழத்தில் கொரோனா பரவல் எதிரொலி.. சென்னை மாநகராட்சி எடுத்த அதிரடி முடிவு..!
- 'தமிழகத்தின் இன்றைய (16-12-2020) கொரோனா அப்டேட்...' சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில்...' - முழு விவரங்கள் உள்ளே...!
- 'லாக்டவுன்ல போர் அடிச்சுது'.. "அதுக்கு?".. 'செக்ஸ் பொம்மையுடன் திருமணமாகி குழந்தை பொறந்துருச்சா?'.. தெறிக்கவிட்ட இளம் பெண்!
- 'UKவில் இருந்து யூடர்ன் அடித்த புதிய வகை கொரோனா வைரஸ்!'... கண்ணை மூடி திறப்பதற்குள் ‘இந்த நாடுகளிலும்’ நுழைந்து அட்டகாசம்!
- ‘இந்த 5 மாநிலங்களில் தான்’... ‘கொரோனா வைரஸ் பரவல் அதிகம்’... ‘மத்திய சுகாதாராத்துறை வெளியிட்ட தகவல்’...!!!
- '2021 முடிவில் மொத்த மக்களில் பாதி பேருக்கு தான் கொரோனா தடுப்பூசி கிடைத்திருக்குமா?'... UK-வில் வெளியான 'வயிற்றில் புளியைக் கரைக்கும்' அறிக்கை!
- தமிழகத்தின் இன்றைய கொரோனா நிலவரம்!.. தற்போது எத்தனை பேர் சிகிக்சை பெறுகிறார்கள்?.. சென்னையின் நிலை என்ன?.. முழு விவரம் உள்ளே
- 'இடியாய் இறங்கிய செய்தி'... 'கொரோனாவுக்கு பலியான உலகின் முதல் பிரதமர்'... அதிர்ச்சியில் நாட்டு மக்கள்!
- “முன்பதிவு அவசியம்!”.. எப்படி பதிவு செய்வது? யாருக்கெல்லாம் முன்னுரிமை தரப்படும்? - மத்திய அரசு பிறப்பித்த ‘அதிரடி’ உத்தரவு!
- ‘சந்தோஷம் கொஞ்சநாள் கூட நீடிக்கல’... ‘உருமாற்றம் அடைந்து வேகமாக பரவும்’... ‘புதிய வகை கொரோனா வைரஸ்’... ‘சிக்கி தவிக்கும் நாடு’...!!!