1300 ஆண்டுகளாக இயங்கும் உலகின் பழமையான ஹோட்டல்.. 52 தலைமுறைகளால் நடத்தப்பட்டு வருகிறது.. எங்கு தெரியுமா?

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

உலகின் மிகப் பழமையான விசயங்களுக்கு மதிப்பு அதிகம். அதை பொக்கிஷமாக கருதி பாதுகாக்க பல நாடுகள் மிகப்பெரிய தொகையை செலவிடும். நம்மிடம் இருந்து அப்படியாக அழிந்து போன பழமையான பொருட்கள் மிக அதிகம். அதற்கு பின்னால் தொலைத்த பின்பு நாம் எவ்வளவு தேடினாலும் அதை அடைய முடியாது.

Advertising
>
Advertising

செக்யூரிட்டி செஞ்ச சின்ன வேலை.. 7 கோடி ஓவியம் அவுட்.. ஆனந்த் மகேந்திரா கொடுத்த பலே ஐடியா

பழமையான பொருட்களுக்கு மதிப்பு அதிகம்:

இதைத் தவிர பல கலைஞர்களுக்கு, பணக்காரர்களுக்கு இதுபோன்ற பழமையான பொருட்களை சேகரிப்பதில் அதிக ஆர்வம் இருக்கும். அவர்கள் உலகின் எந்த மூலையில் பழைய பொருட்கள் கிடைத்தாலும் தேடி வாங்குவார்கள். அந்த பொருட்கள் ஏலத்துக்கு வரும்போது மிகப்பெரிய தோகை கொடுத்து வாங்கவும் தயக்கம் காட்ட மாட்டார்கள். அந்த வகையில் தற்போது உலகின் பழமையான ஹோட்டல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

718-ஆம் ஆண்டு கட்டப்பட்டது:

இந்த ஹோட்டல் பழமையான நகரமான ரோமிலோ அல்லது வரலாற்றுச் சிறப்பு மிக்க லண்டன் அல்லது பாரிஸ் நகரில் காணப்படவில்லை. கின்னஸ் சாதனைப் புத்தகத்தின் படி, இது ஜப்பானின் யமனாஷி என்னும் நகரத்தில் அமைந்துள்ளது. நிஷியாமா ஒன்சென் கெய்யுங்கன் எனப்படும் இந்த ஹோட்டல் 705-ம் ஆண்டு முதல் செயல்பாட்டில் உள்ளது. அதுமட்டுமல்லாமல், 2-வது பழமையான ஹோட்டலும் ஜப்பானில்தான் அமைந்துள்ளது. இது 718-ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இதன் பெயர் ஹோஷி ரியோகன் ஆகும். உலகின் பழமையான வணிக நிறுவனங்கள் அதிகம் இருக்கும் நாடுகளின் பட்டியலில் ஜப்பான் முதலிடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

1,300 ஆண்டுகளுக்கும் முன் கட்டப்பட்ட ஹோட்டல்:


2008-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட கொரியன் வங்கி அறிக்கையின்படி, உலகில் 200 ஆண்டுகளுக்கு முந்தைய காலம் முதல் தற்போது வரை மொத்தம் 5,586 நிறுவனங்கள் செயல்பாட்டில் உள்ளன. இவற்றில், 3,146 ஜப்பானிலும், 837 ஜெர்மனியிலும், 222 நெதர்லாந்திலும், 196 பிரான்சிலும் உள்ளன. யமனாஷி மாகாணத்தில் உள்ள ஹயகாவாவில் அமைந்துள்ள நிஷியாமா ஒன்சென் கெய்யுங்கன் கி.பி 705-இல் நிறுவப்பட்டது. அப்போதிலிருந்து 1,300 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 52 தலைமுறைகளால் இந்த ஹோட்டல் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

எங்களுக்குள்ள நல்ல புரிதல் இருக்கு.. இப்போ எங்களுக்கு ஒரே 'ஆசை' தான்.. காதலர் தினத்தில் இணையும் திருநங்கை - திருநம்பி ஜோடி

1300 YEAR OLD HOTEL, JAPAN, 52 GENERATIONS, 1300 ஆண்டுகள் பழமையான ஹோட்டல்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்