‘கல்யாணத்திற்கு போனபோது’... ‘நிகழ்ந்த பயங்கரத்தில்’... குடும்பத்தினரை காப்பாற்ற’... '13 வயது சிறுவன் செய்த காரியம்'!
முகப்பு > செய்திகள் > உலகம்போதைப்பொருள் கடத்தல் கும்பல் தாக்குதலில் 6 குழந்தைகள் உள்பட 9 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் இருந்து வந்து மெக்சிகோவில் குடியேறியவர், ரோனிட்டா. இரட்டை குடியுரிமை பெற்ற இந்தப் பெண்ணுக்கு 4 குழந்தைகள். இவர் தனது குடும்பத்துடன், மெக்சிகோவில் லா மோரா நகரத்தில் வசித்து வந்தார். இவரது நெருங்கிய உறவினர்கள் பலரும் அதேப் பகுதியில் வசித்து வந்தனர். இந்நிலையில் பவிஸ்ப் நகரில் உறவினர் ஒருவரின் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக, ரோனிட்டா தனது குழந்தைகள் மற்றும் உறவினர்களுடன் லா மோரா நகரில் இருந்து புறப்பட்டு சென்றார்.
14 குழந்தைகளுடன் மொத்தம் 17 பேர், 3 கார்களில் பயணம் செய்தனர். அவர்களது கார்கள் பவிஸ்ப் நகருக்கு அருகே சென்றபோது, சற்றும் எதிர்பாராத வகையில், ஆயுதம் ஏந்தி வந்த மர்ம கும்பல், அவர்கள் கார்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டது. ரோனிட்டாவும், அவரது குழந்தைகளும் பயணம் செய்த காரின் பெட்ரோல் டேங்கில் குண்டு பாய்ந்து, கண்ணிமைக்கும் நேரத்தில் தீப்பிடித்து எரியத் தொடங்கியது. அத்துடன், அந்தக் காரை தொடர்ந்து ரோனிட்டாவின் உறவினர்கள் வந்த கார்களுக்கும் தீ பரவியது.
அனைவரும் அலறி துடித்தனர். இந்த கோர தாக்குதலில் 3 பெண்கள், 6 குழந்தைகள் உயிரிழந்தனர். இதற்கிடையில் கார்களில் இருந்த மற்ற குழந்தைகள் துப்பாக்கி குண்டு காயங்களுடனும், தீக்காயங்களுடனும் உயிர்தப்பி, அருகில் இருந்த புதருக்குள் மறைந்துகொண்டனர். அதில், 13 வயது சிறுவன் ஒருவன், காட்டுப்பகுதியிருந்து தப்பி, சுமார் 6 மணிநேரம் 23 கிலோமீட்டர் நடந்தே சென்று, உதவி கேட்டுள்ளான்.
இதையடுத்து அங்கு வந்த அதிகாரிகள், குழந்தைகளை மீட்டு, மருத்துவமனைகளில் சேர்த்தனர். இந்நிலையில் தங்கள் எதிராளிகள் பயணம் செய்த கார்கள் என்று நினைத்தே, அந்த கார்கள்மீது துப்பாக்கிச்சூட்டை போதைப்பொருள் கடத்தல் கும்பல் நடத்தி இருப்பது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம், பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளநிலையில், அதிபர் அமெரிக்க அதிப்ர் டொனால்டு ட்ரம்ப் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘எரிந்து கிடந்த காருக்குள் இருந்த ஆண் சடலம்’.. ‘அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்’..
- ‘கார் ஏசி வெடித்து பயங்கர விபத்து’.. ‘திருமணத்திற்கு ஒரு மாதமே உள்ள நிலையில்’ .. ‘இளைஞருக்கு நேர்ந்த சோகம்’..
- ‘இன்னும் அற்புதமான மனுஷங்க இருக்கத்தான் செய்யறாங்க!’.. ‘குட்டி தங்கையுடன் வந்து’.. ‘வியக்கவைத்த சிறுவன்!’..
- ‘நடுரோட்டில் தீடிரென தீப்பிடித்து’... ‘எரிந்த சொகுசு கார்’... 'பதறிப்போன டிரைவர்'!
- ‘வீட்டு வாசலில்’... ‘விளையாடிக் கொண்டிருந்த’... '4 வயது குழந்தைக்கு நேர்ந்த பரிதாபம்’!
- ‘தற்கொலை என நினைத்தபோது’.. ‘இறுதிச்சடங்கில் 7 வயது மகள் கூறியதைக் கேட்டு’.. ‘அதிர்ந்துபோன குடும்பத்தினர்’..
- 'பசிக்கும்ல'... ‘சாப்பாட்டுக்கு முன்னாடி’... ‘இதெல்லாம்’... ‘இன்னொரு சிறுவனின் வைரல் வீடியோ’!
- ‘லாஸ் ஏஞ்சல்சில் பரவிய தீ’... ‘இடம் இன்றி தவித்த ஹாலிவுட் பிரபலங்கள்’!
- ‘ஹோட்டலில் தீடீரென பற்றிய தீ’.. ‘கொழுந்துவிட்டு எரிவதால் பரபரப்பு’.. ‘கட்டுக்குள் கொண்டுவர தீயணைப்பு வீரர்கள் போராட்டம்’..
- ‘இருசக்கர வாகனம் மீது பேருந்து மோதி கோர விபத்து’.. ‘பள்ளிக்குக் கிளம்பிய சிறுவனுக்கு வழியில் நடந்த பயங்கரம்’..