'முதல்ல சித்திரவதை, அப்புறமா தலைமுடி'... 'சீனாவுக்குள் இருக்கும் இன்னொரு முகம்'... அதிர்ச்சியை கிளப்பியுள்ள பகீர் சம்பவம்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

சர்வதேச அளவில் சீனா மீது தற்போது பல குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், தற்போது சீனா மீது வைக்கப்பட்டுள்ள புகார் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் இஸ்லாமிய மதத்தைப் பின்பற்றும் உய்குர் இன மக்கள் லட்சக்கணக்கில் வசித்து வருகிறார்கள். இவர்களைச் சீனர்களின் வாழ்க்கை முறைக்கு 5 ஆண்டுகளுக்குள் மாற்றச் சீனா திட்டமிட்டுள்ளது. சீனாவின் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் உய்குர் இன மக்கள் அங்குள்ள, வதை முகாம்களில் அடைக்கப்பட்டு கடுமையான சித்திரவதைக்கு ஆளாக்கப்படுகிறார்கள். 

சிறுபான்மையினர் சமுதாயத்தைச் சேர்ந்த  உய்குர் முஸ்லிம்கள் சீனாவின் தங்களுக்கு எதிரான அடக்குமுறைகளை எதிர்த்து பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தை நாடியுள்ளனர் இதனிடையே உய்குர் இன மக்கள் அடைக்கப்பட்டுள்ள சித்திரவதை முகாம்களில் உள்ள பெண்களின் தலைமுடியை வெட்டி, அவற்றை வெளிநாடுகளுக்கு அழகுசாதன பொருள்களாகச் சீனா ஏற்றுமதி செய்வதாக அதிர்ச்சி குற்றச்சாட்டு தற்போது எழுந்துள்ளது.

ஜின்ஜியாங்கில் இருந்து நியூயார்க் நகரத் துறைமுகத்துக்குக் கப்பலில் வந்த 13 டன் சிகை அலங்கார பொருள்கள் இருந்த நிலையில், இந்த பொருள்களை அமெரிக்கச் சுங்கத்துறையினர் கைப்பற்றியுள்ளனர். இதன் மொத்த மதிப்பு 8 லட்சம் அமெரிக்க டாலர்கள் ஆகும்.  அமெரிக்காவில் மனித உரிமை மீறல் செயலுக்கு அனுமதி கிடையாது எனக் கூறியுள்ள சுங்கத்துறை துணை கமிஷனர் பிரேண்டா ஸ்மித்,

''பிற நாடுகளிலிருந்து இது போன்ற அழகு சாதன பொருட்கள் வரும்போது, அந்த நிறுவனங்களின் உண்மை, தரம் மற்றும் மனித உரிமைகளை மீறுகிறார்களா என்பதை ஆய்வு செய்வது அவசியம் எனக் கூறியுள்ளார். சீன அரசு உய்குர் இன மக்களைக் கொத்தடிமை போல நடத்துவதாகக் கூறும் உய்குர் இன மக்களின் உரிமைகளுக்காகப் போராடி வரும் ருஷான் அப்பாஸ்,

''பகலில் கடுமையான வேலை பார்த்துவிட்டு , இரவில் வதை முகாமில் கொண்டு சென்று அடைக்கிறார்கள் என உருக்கத்துடன் கூறியுள்ளார். சீனா மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது உய்குர் இன மக்களுக்கு நடக்கும் கொடுமைகள் வெளியில் வந்துள்ளது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்