'இது விளையாட்டு காரியம் இல்ல'...'விளைவு ரொம்ப மோசமா இருக்கும்'...விஞ்ஞானிகள் எச்சரிக்கை!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

பருவநிலை மாற்றத்தால் அவசர நிலை ஏற்பட்டு இருப்பதாக 11 ஆயிரம் விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்திருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காடுகள் அழிப்பு, பூமி வெப்பமயமாகுதல், பனிபாறைகள் உருகுதல், உள்ளிட்டவற்றால் பருவநிலையில் பல மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. இதனால் மழை பொழிவு மிகவும் குறைந்து வருகிறது. இது பூமியில் பல தாக்கங்களை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் உலகம் முழுவதும் பருவநிலை மாற்றத்தால் அவசர நிலை ஏற்பட்டு இருப்பதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பயோ-சயின்ஸ் இதழில் பருவநிலை குறித்து வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையை 153 நாடுகளை சேர்ந்த 11 ஆயிரத்து 258 விஞ்ஞானிகள் ஏற்று கொண்டு கையெழுத்திட்டு உள்ளனர். இதில் இந்தியாவை சேர்ந்த 69 பேரும் கையெழுத்திட்டு இருக்கிறார்கள்.  காடுகள் அழிப்பு, கார்பன் வெளியேற்றம், மக்கள் தொகை அதிகரிப்பு, பூமி வெப்பமயமாகுதல், பனி பாறைகள் உருகுதல், கடல் மட்டம் உயர்வு, மற்றும் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேல் நிகழ்ந்த எரிபொருள் பயன்பாடு குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

இதன் முடிவுகள் தற்போது நாம் மிகுந்த நெருக்கடி நிலையில் இருப்பதை உணர்த்தியுள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள். இந்த ஆய்வுக்கு தலைமை தாங்கிய சிட்னி பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆய்வாளர் தாமஸ் நியூசம் கூறும்போது ''நாம் கார்பன் வெளியேற்றத்தை குறைக்கவில்லை என்றாலும், எரிபொருள் தேவைக்காக நிலங்களை அழிப்பதை நிறுத்தவில்லை என்றாலும் மிகவும் மோசமான விளைவுகளை நாம் சந்திக்க நேரிடும்.  அதோடு உலகில் உள்ள அரசாங்கங்கள் பருவ நிலை அவசர நிலையை பிரகடனப்படுத்த வேண்டிய நிலையில் இருக்கின்றன என அவர் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் காற்று மாசுபாடு என்பது பெரும் பிரச்சனையாக மாறி வரும் நிலையில், உலகம் முழுவதும் பருவ நிலை நெருக்கடி ஏற்பட்டுள்ளது என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்து இருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

CLIMATE CHANGE, SCIENTISTS, UNTOLD SUFFERING, DELHI AIR POLLUTION

மற்ற செய்திகள்