"வயசு 11 தான்".. IQ மதிப்பெண்ணில் ஐன்ஸ்டீன், ஹாக்கிங்கை ஓவர்டேக் பண்ணிட்டாரா? வைரலாகும் சிறுவன்..

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

11 வயது சிறுவன் ஒருவன் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மற்றும் ஸ்டீபன் ஹாக்கிங் ஆகிய இருவரின் IQ மதிப்பை விட அதிக மதிப்பெண் பெற்றுள்ள தகவல் தற்போது இணையத்தில் அதிகம் வைரல் ஆகி வருகிறது.

Advertising
>
Advertising

Also Read | "செத்து போய்ட்டான்னு தான் நெனச்சேன்".. மகன் பத்தி 17 வருஷம் கழிச்சு பெண்ணுக்கு தெரிஞ்ச உண்மை!!

உலகின் புகழ்பெற்ற அறிவியலாளர்களாக கருதப்படுபவர்களில் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மற்றும் ஸ்டீபன் ஹாக்கிங் ஆகியோர் மிக முக்கியமானவர்கள். இவர்களின் அதிக நுண்ணறிவு எண் (IQ) என்பது 160 மதிப்பெண்களாக இருந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

அப்படி ஒரு சூழலில் இதனை மிஞ்சும் விதமாக 11 வயது சிறுவன் மென்சா டெஸ்ட் எனப்படும் நுண்ணறிவு (IQ) தேர்வில் நம்ப முடியாத வகையில் பெற்றுள்ள மதிப்பெண்கள் தற்போது பலரையும் ஆச்சரியப்படுத்தி வருகிறது.

பிரிட்டனின் லீட்ஸ் பகுதியில் உள்ள தொடக்கப் பள்ளி ஒன்றில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார் சிறுவன் யூசுப் ஷா. இவர் மென்சா டெஸ்டில் 162 மதிப்பெண்கள் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில், இந்த விஷயம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மற்றும் ஸ்டீபன் ஹாக்கிங் IQ டெஸ்ட்டில் பெற்ற 160 மதிப்பெண்களை விட அதிக மதிப்பெண் பெற்றுள்ளார் சிறுவன் யூசுப் ஷா.

இது பற்றி வெளியான தகவலின் படி, அந்த சிறுவனை பள்ளியில் அனைவரும் புத்திசாலி என்று கூறி வந்ததாகவும் இந்த தேர்வுக்காக சிறுவன் தயாராகி வந்ததாகவும் தெரிகிறது. மேலும் இந்த தேர்வை எடுக்கும் நபர்களில் 2 முதல் சதவீதத்தில் தான் இருப்பேனா என்பதை அறியவும் விரும்பியதாக யூசுப் தெரிவித்துள்ளார்.

அதே போல, இந்த தேர்வின் ஒரு பகுதியில் 15 கேள்விகளுக்கு வெறும் மூன்று நிமிடங்களிலும் சிறுவன் யூசுப் ஷா பதில் அளித்துள்ளார். மேலும், இந்தத் தேர்விற்காக தயாராக மகன் கடினமாக உழைத்தது குறித்தும் அவரது தந்தையான இர்பான் சில கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். வரும் காலத்தில் கேம்பிரிட்ஜ் அல்லது ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் கணிதம் படிக்கவும் சிறுவன் யூசுப் ஷா விருப்பம் தெரிவித்துள்ளார்.

முன்னணி அறிவியலாளர்களான ஐன்ஸ்டீன் மற்றும் ஸ்டீபன் ஹாக்கிங் ஆகியோரை விட அதிக IQ கொண்ட சிறுவனை தற்போது பலரும் பாராட்டி வருகின்றனர்.

Also Read | "இனிமே அப்டி இருக்காது".. Retire ஆன பொல்லார்ட்.. CSK போட்ட நெகிழ்ச்சி கமெண்ட்!!

BOY, IQ, UK BOY, YUSUF SHAH, UK BOY YUSUF SHAH, HIGHER IQ

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்