சும்மா தான் இந்த 'க்ரூப்' ஆரம்பிச்சேன்...! இப்படி ஒரு 'வேலண்டைன்ஸ் டே'வ பார்த்ததே இல்ல...! நெகிழும் 104 வயது முதியவர்...!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்த 104 வயது முதியவருக்கு 70 ஆயிரத்துக்கு மேற்பட்ட காதலர் தின வாழ்த்து அட்டைகள் அனுப்பப்பட்டுள்ளன.

இரண்டாம் உலகப்போரின் போது கப்பல்படையில் மேஜரக இருந்து ஓய்வு பெற்றவர்  பில் ஒயிட், உலகம் முழுக்க அன்பை பறிமாற வேண்டும் என கோரிக்கை விடுத்து, 'ஆப்பரேசன் வேலண்டைன்' என்ற க்ரூப் ஒன்றை தொடங்கினார். அது சமூக வலைத்தளங்களில் வைரலாகி அதிகமாக பகிரப்பட்டது.

இதையடுத்து, உலகின் பல பகுதிகளில் இருந்தும் பில் ஒயிட்டிற்கு கடிதங்கள், பரிசுகள் அதிகமாக வந்து குவிய தொடங்கின. நாளாக இது மேலும் அதிகமானது. இந்த அன்பால் திக்குமுக்காடி போன மேஜர், சும்மாதான்  'ஆப்பரேசன் வேலண்டைன்' க்ரூப் தொடங்கினேன், எனக்கு 104 வயது ஆகிறது, ஆனால் இது போன்ற காதலர் தினத்தை இதுவரை கொண்டாடியதே இல்லை என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

VALENTINESDAY

மற்ற செய்திகள்