'நள்ளிரவில்' முதியோர் இல்லத்தில் இருந்து தப்பித்து... 101 வயது பாட்டி பார்த்த வேலை... 'நொந்து' போன போலீசார்!
முகப்பு > செய்திகள் > உலகம்மகளுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்வதற்காக, முதியோர் இல்லத்தில் இருந்து 101 வயது பாட்டி தப்பித்த சம்பவம் ஜெர்மனியில் நடந்துள்ளது.
கொரோனா காரணமாக ஜெர்மனி நாட்டிலும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் அங்குள்ள புரூன்ஸ்விர்க் நகரத்தை சேர்ந்த முதியோர் இல்லத்தில் தங்கியிருந்த 101 வயது பாட்டிக்கு திடீரென ஒரு ஆசை ஏற்பட்டது. அதாவது தன்னுடைய மகளுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்ல வேண்டும் என்பது தான் அது.
இதை வெளியில் சொன்னால் விடமாட்டார்கள் என்று எண்ணி நள்ளிரவில் ரகசியமாக முதியோர் இல்லத்தில் இருந்து அந்த பாட்டி தப்பித்து இருக்கிறார். ஆனால் மகள் வசிப்பது புறநகர் பகுதி என்பதால் அங்கு செல்லும் வழியை அவர் மறந்து விட்டார். ரோட்டில் பாட்டி சுற்றித்திரிந்ததை பார்த்த ரோந்து போலீசார் அவரிடம் விசாரித்துள்ளனர். பதிலுக்கு பாட்டி உண்மையை மறைத்து மகள் வீட்டில் வசிப்பதாகவும் வழிமாறி வந்து விட்டேன் என்றும் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து போலீசார் அவரை அவரது மகள் வீட்டுக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரது மகள் தனக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்ல முதியோர் இல்லத்தில் இருந்து பாட்டி தப்பித்த விஷயத்தை போட்டு உடைத்து விட்டார். இதையடுத்து மகளுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லிய பாட்டியை மீண்டும் முதியோர் இல்லத்திற்கு அழைத்து சென்ற போலீசார், ஊரடங்கு நேரத்தில் இதுபோல மீண்டும் இப்படி செய்யாதீர்கள் என்று அவருக்கு அட்வைஸ் செய்து திரும்பி இருக்கின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'ஒரு லட்சத்தை' நெருங்கும் 'பலி எண்ணிக்கை...' இந்த 'நூற்றாண்டின்' மிகப்பெரிய 'மனித உயிரிழப்பு...' 'திகைத்து நிற்கும் உலக நாடுகள்...'
- நோய் 'எதிர்ப்பு' சக்தியை அதிகரிக்க... மதிய உணவுடன் சேர்த்து 'இலவச' முட்டை... அசத்தும் மாவட்டம்!
- மக்களின் 'பிரார்த்தனை' வீண் போகவில்லை... ஐ.சி.யூ-வில் இருந்து... 'சாதாரண' பிரிவுக்கு மாற்றப்பட்ட பிரதமர்!
- 'ஆயுதமின்றி' போரிடுவதற்கு சமம்... 100 மருத்துவர்களின் 'இறப்பால்' கலங்கிப்போன சுகாதாரத்துறை!
- ‘உலகமே லாக் டவுனில்’... ‘சுழட்டி எடுக்கும் கொரோனா பாதிப்பிலும்’... ‘விண்வெளி சென்ற இருநாட்டு வீரர்கள்’...!
- 'கொரோனாவ' கூட கட்டுப்படுத்திடலாம் போல... 'இத' கண்ட்ரோல் பண்ண முடிலயே... அதிரடியில் இறங்கிய போலீசார்!
- கொரோனா அறிகுறியுடன்... 'முதல்வர்' கூட்டத்தில் பங்கேற்ற 'சுகாதாரத்துறை' செயலாளர்... அடுத்தடுத்து 'காத்திருந்த' அதிர்ச்சிகள்!
- கண்டிப்பா 'ஹெல்ப்' பண்ணியே ஆகணும்... 'விவசாயிகளின்' வாட்டம் போக்க 'களமிறங்கிய' தொழிலதிபர்... குவியும் பாராட்டுக்கள்!
- கொரோனாவால் 'பாதிக்கப்பட்டவர்' குணமடைந்ததை... எப்படி 'உறுதி' செய்வது?... மருத்துவர்கள் விளக்கம்!
- ‘கொரோனாவுக்கு மருந்து’... ‘புதிய முயற்சிக்கு, நாட்டிலேயே முதலாவதாக'... ‘ஐ.சி.எம்.ஆரிடம் அனுமதி பெற்ற மாநிலம்’!