இஸ்லாமிய மதபோதகர் ‘இறுதி சடங்கில்’ குவிந்த லட்சக்கணக்கான மக்கள்.. ‘கேள்விக்குறியான’ ஊரடங்கு..!
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே இஸ்லாமிய மதபோதகரின் இறுதி சடங்கில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் கலந்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வங்கதேசத்தில் தற்போதுவரை கொரோனா தொற்றால் 2,456 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 91 பேர் வைரஸ் தாக்கி உயிரிழந்துள்ளனர். இதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அந்நாட்டில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் வங்கதேச இஸ்லாமிய அமைப்பின் தலைவரும், மதபோதகருமான மவுலானா சுபாயர் அஹ்மத் அன்சாரி உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். ஆனால் தற்போது ஊரடங்கு அமலில் உள்ளதால், அவரின் இறுதி சடங்கு தொழுகைக்கு 5 பேருக்கு மேல் வரக்கூடாது என அந்நாட்டு அரசு அறிவுறுத்தியுள்ளது.
ஆனால் ஊரடங்கை மீறி சுமார் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் அவரின் இறுதி சடங்கில் கலந்துகொண்டனர். பிரக்மன்பாரியா மாவட்டத்தின் சாலைகளில் மக்கள் அதிகளவில் கூடியதால் அதிகாரிகள் கட்டுப்படுத்த முடியாமல் திணறினர். இதனை அடுத்து அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்ப்ட்டுள்ளனர். உலகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வரும் நிலையில், வங்கதேசத்தில் இஸ்லாமிய மதபோதகரின் இறுதி சடங்கில் லட்சக்கணக்கானோர் ஒரே இடத்தில் கூடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'வரலாற்றில் ஒரு கருப்பு நாள்'... 'ஆட்டம் கண்ட கச்சா எண்ணெயின் விலை'... உறைந்து போன அமெரிக்க பங்கு சந்தை!
- "டைம் முடிஞ்சுது, கடையை சீக்கிரம் மூடுங்க"... எச்சரித்த 'போலீசார்'... 'மறுத்த' கடைக்காரர்கள்... அடுத்து நடந்த 'பரபரப்பு' சம்பவம்!
- திடீர்னு எப்டி 'இத்தனை' பேருக்கு கொரோனா வந்துச்சு?... கண்டுபிடிக்க முடியாமல் 'திணறும்' அதிகாரிகள்!
- காய்ச்சல் இருக்கவங்க இனி... 'ஓடவும்' முடியாது ஒளியவும் முடியாது... செம 'ட்ரிக்குடன்' களமிறங்கும் 'சென்னை' போலீஸ்!
- 'அவர்களோட அன்பை மறக்க முடியாது’... ‘திரும்பவும் வருவேன்’... ‘முதியவரின் உணர்வுப்பூர்வமான சம்பவம்’!
- 'சீனாவில்' விசாரணை... 'வுஹானுக்குள்' நுழைய 'அனுமதி' இல்லை... 'முற்றும்' மோதலால் 'பரபரப்பு'...
- 'கோடிகளில்' வருமானம் இருந்தும்... லாக்டவுனை 'சமாளிக்க' முடியாமல்... 'தொழிலதிபர்' செய்யும் காரியம்!...
- ‘இப்போதைக்கு இதெல்லாம் கிடையாது’... ‘இந்திய நிறுவனத்தின் அதிரடி முடிவு’... ‘ஏமாற்றத்திலும், மூன்று ஆறுதலான விஷயங்கள்’!
- இந்த நேரத்தில் 'அலட்சியம்' என்ற வார்த்தையை பயன்படுத்தலாமா?-அமைச்சர் விஜயபாஸ்கர்!
- ‘நான்கு நாட்களாக’... ‘இந்த 8 மாவட்டங்களில்’... ‘எந்த புதிய பாதிப்பும் இல்ல’... ‘கட்டுக்குள் வரும் கொரோனா’???