‘டிக்டாக்கிற்கு போட்டியாக களமிறங்கும் யூடியூப்’.. வெளியான அசத்தல் தகவல்..!
முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்டிக் டாக் செயலிக்கு போட்டியாக கூகுள் நிறுவனம் புதிய செயலியை அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சீனாவின் பைட் டான்ஸ் என்ற நிறுவனம் டிக் டாக் செயலியை உருவாக்கியுள்ளது. இதில் பிரபலமான படத்தின் பாடல்கள், வசனங்களுக்கு பயனர்கள் பாடியும், நடனமாடியும் பகிர்ந்து வருகின்றனர். இதை மெருகேற்ற கூடுதலான எஃபெக்ட்டுகளை சேர்க்கவும் வசிதிகள் கொடுக்கப்பட்டிருக்கும். இதுவரை பல நிறுவனங்கள் டிக் டாக் செயலிக்கு போட்டியாக புது செயலிகளை கொண்டுவர முயன்று வெற்றி பெற முடியவில்லை.
ஃபேஸ்புக் நிறுவனம் லாஸோ என்ற செயலியை கொண்டு வந்தது. ஆனால் இந்த செயலி பற்றி பலருக்கு இன்னமும் தெரியவில்லை. டிக் டாக்கின் சில அம்சங்களை இன்ஸ்டாகிராம், ஸ்னாப்சாட்டும் கொண்டுவர முயன்றன. இதனை பைன் என்ற பிரபல செயலியை உருவாக்கியவர்களில் ஒருவர் பைட் என்ற செயலியை உருவாக்கி அறிமுகம் செய்தார். ஆனால் அது இன்னும் பரவலாகவில்லை. கடந்த 12 மாதங்களில் ஆப்பிள் மற்றும் ப்ளே ஸ்டோர் உள்ளிட்ட தளங்களில் இருந்து டிக் டாக் செயலியை 84.2 கோடி முறைக்கும் அதிகமாக பதிவிறக்கம் செய்யப்பட்டிருப்பதாகவும், உலகம் முழுக்க, சீனாவை தவிர்த்தே தினமும் 4.1 கோடி மக்கள் டிக் டாக் செயலியை பயன்படுத்துவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் டிக் டாக்கிற்கு போட்டியாக ஷார்ட்ஸ் என்ற புதிய அம்சத்தை யூடியூப்பில் கொண்டுவர கூகுள் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. டிக் டாக் போன்று தனி செயலியாக இல்லாமல், யூடியூப் மொபைல் செயலியிலேயே இந்த ஷார்ட்ஸ் வசதி கொடுக்கப்படும். மேலும் யூடியூப்பில் உரிமம் பெற்ற பாடல்கள் அதிகம் இருப்பதால் அது ஷார்ட்ஸுக்கு உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'கொரோனா வார்டில் டிக்டாக்...' செல்போன் யூஸ் பண்ணின 3 பேரையும் டிஸ்மிஸ் பண்ணியாச்சு, அதுமட்டுமில்ல...' அதிர்ச்சி சம்பவம்...!
- 'கர்ப்பிணி' காதலிக்கு... 'யூ ட்யூப்' பார்த்து காட்டுப்பகுதியில் 'பிரசவம்' பார்த்த 'காதலன்'... 'பிரசவத்தின்' போது நிகழ்ந்த 'விபரீதம்'...
- "கூகுள் நிறுவனர் 'சுந்தர் பிச்சை' என்னிடம் மன்னிப்பு கோரினார்..." "அவர் மரியாதைக்குரிய நபர்..." "சிறந்த மனிதர்..." அதிபர் 'ட்ரம்ப்' செய்தியாளர்களிடம் 'விளக்கம்'...
- ‘5000 ரூபாய் வாங்கினேனா?.. ஃபேக் ஐடிய வெச்சு பணம் பறிச்சிருக்காங்க!’.. ‘மன உளைச்சலா இருக்கு!’.. ‘டிக்டாக்’ இலக்கியா புகார்!
- ‘கொரோனாவ ஸ்டாப் பண்ண, இந்த 5-ஐயும் பண்ணுங்க’.. வைரல் ஆகும் கூகுளின் எளிய வழிமுறைகள்!
- 'யாரும் பயப்படாதீங்க'... 'பெங்களூர் அலுவலகத்தில் கொரோனா'... அதிரடி அறிவிப்பை வெளியிட்ட 'கூகுள்'!
- கொண்டாட்டத்தின்போது ‘புதுமாப்பிள்ளை’ செய்த ஸ்டண்ட்டால்... திருமணமான ‘இரண்டே’ மாதங்களில் நேர்ந்த ‘துயரம்’... போலீசுக்கு சொல்லாமல் ‘குடும்பத்தினர்’ செய்த காரியம்...
- 'நான் விளையாட்டா தான் செஞ்சேன்'?... 'வீடியோ'வால் ஆடிப்போன அதிகாரிகள்'... 'பட்' அடித்தது ஜாக்பாட்!
- ‘யூடியூப்’ வீடியோ பாத்து... ‘ஆன்லைன்ல’ இதுக்காகவே ‘ஆர்டர்’ பண்ணி வாங்கினது... ‘1000 ஆண்டுகள்’ பழமையான கோயிலில் நடந்த ‘பரபரப்பு’ சம்பவம்...
- ஓடிப்போன 'டாடியை' கண்டுபிடிக்க... மகன் செய்த 'சூப்பர்' காரியம்... பலரையும் 'வியப்பில்' ஆழ்த்திய 'நெகிழ்ச்சி' சம்பவம்...