‘காணாமல் போகும் யூட்யூப் சேனல்கள்’... 'ஹேக்கர்களால் கலங்கும் கிரியேட்டர்கள்'!

முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்
By |

ஹேக்கர்கள் தற்போது யூட்யூப் சேனல்களை குறிவைத்திருப்பது, கிரியேட்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமையல், நடனம், இசை மட்டுமின்றி, தங்களது திறமைகள் அனைத்தையும் வெளிப்படுத்தும் தளமாக யூட்யூப் உள்ளது. இந்நிலையில், யூட்யூப் தளத்திலிருந்தே, யூட்யூப் சேனல்கள் மாயமாவதாகப் புகார்கள் எழுந்துள்ளன. அதிலும் குறிப்பாக இந்திய யூட்யூப் சேனல்கள் காணாமல் போவதாக புகார் எழுந்துள்ளது. ZD Net என்னும் நிறுவனம் நடத்திய ஆய்வில் இது தற்போது தெரியவந்துள்ளது.

ஹேக்கர்கள் ஃபிஷ்ஷிங் (phishing email) மெயில்கள் மூலம், யூட்யூப் தளத்தில் கணக்கு வைத்திருப்போரின் தகவல்களை, ஹேக் செய்வதாகக் கூறப்படுகிறது. இதனால் இந்தியாவின் பல யூட்யூப் கிரியேட்டர்களின் சேனல்கள் ஹேக் செய்யப்பட்டு காணாமல் போயுள்ளதாக தெரிகிறது. இதுதொடர்பாக பல புகார்கள் ட்விட்டர் மூலம் யூட்யூப் நிர்வாகத்துக்குத் தெரியப்படுத்தப்பட்டு வரப்படுகின்றது.

யூட்யூப் கிரியேட்டர்களைத் தாக்கும் ஹேக்கர்கள், Modlishka என்னும் ஃபிஷ்ஷிங் டூல் ஒன்றைப் பயன்படுத்தி, இவ்வாறு ஹேக் செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. போலியான கூகுள் லாகின் பேஜ் மூலம், யூட்யூப் சேனல் கிரியேட்டர்களின் தகவல்கள் திருடப்படுவதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் பாதுகாப்பு அம்சம் குறித்து தெரிவித்துள்ள யூட்யூப் சேனல் நிறுவனம், இதனைக் கவனத்தில் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளது. பாதுகாப்பு அம்சத்தில், பல தொழில்நுட்ப அப்டேட்களை யூட்யூப் அளிக்க வேண்டும் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

YOUTUBE, HACKERS, CREATORS, HIJACK

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்