இது ரியல் ‘சிட்டி’..!! மனித உணர்வுகள் கொண்ட ரோபோவை அறிமுகப் படுத்திய Xiaomi .. சிலிர்க்க வைக்கும் Making வீடியோ
முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்ஷங்கர் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், ரஜினிகாந்த் நடித்த எந்திரன் திரைப்படத்தில், வசீகரன் என்கிற விஞ்ஞானி ரஜினிகாந்த் சிட்டி என்கிற ஒரு ரோபோவை உருவாக்குவார்.
பார்ப்பதற்கு மனிதர்கள் போலவே இருக்கும் இந்த சிட்டி என்கிற கற்பனை ரோபோ கதாபாத்திரம் செயற்கை நுண்ணறிவு திறன் கொண்டது மட்டுமில்லாமல், மனிதர்களை போலவே உணர்வுகளுக்கான பயிற்சி பெற்ற ரோபோவாகவும் உருவெடுக்கும்.
இந்நிலையில்தான் மேற்கூறியபடி, மனிதர்களின் உணர்வுகளை உணரும் ஹியூமனாய்டு ரோபோவை பிரபல சியோமி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. சுமார் 82 லட்ச ரூபாய் மதிப்பு கொண்டதாக சொல்லப்படும் இந்த ரோபோவின் செயல்பாடுகள் அப்படியே ‘எந்திரன்’ படத்தில் வரும் சிட்டி ரோபோவை நினைவுபடுத்தும் விதமாக உள்ளதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த ரோபோவை அறிமுகம் செய்யப்பட விதமும், எந்திரன் படத்தில் டாக்டர் வசீகரன் சிட்டி ரோபோவை அறிமுகம் செய்து வைத்து பேசும் அந்த நிகழ்வு போல நடந்துள்ளது.
சிட்டியை நினைவுபடுத்தும் இந்த ரோபோவின் பெயர் ‘சைபர்ஒன், Curved OLED பேனலை இந்த ரோபோ தனது முகமாக கொண்டுள்ளது. இரண்டு கேமராக்கள் இதில் இடம்பெற்றுள்ளன. அவற்றின் மூலம் தனிநபர்களை அடையாளவும் காணவும் 3டி வழியில் இந்த உலகை காணவும், இந்த ரோபோவால் உடியும்.
177 சென்டிமீட்டர் உயரம் கொண்ட இந்த ரோபோவை சியோமி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜெய் ஜூன், சியோமியின் 2022-ஆம் ஆண்டுக்கான Mix Fold 2 எனும் மடிக்கக் கூடிய ஸ்மார்ட்ஃபோனை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சியுடன் இணைந்து அறிமுகப்படுத்தினார். ஏற்கனவே கடந்த வருடம் இதே ஆகஸ்டு மாதம், சைபர் டாக் எனும் ரோபோவை ச்யோமி அறிமுகப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Also Read | பெரும் சோகம்.! பிரபல இந்திய பங்குச்சந்தை முதலீட்டாளர் & தொழிலதிபர் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா மரணம்.!
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்