போடு சக்க.. குறைஞ்ச விலையில் டாப்லெட்.. Xiaomi நிறுவனத்தின் வேறமாரி அறிவிப்பு..!

முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்
By |

சியோமி நிறுவனம் இந்தியாவில் மலிவான விலையில் டேப்லட் விற்பனையை துவங்க இருப்பதாக அறிவித்து உள்ளது. இதனால் டெக் பிரியர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

Advertising
>
Advertising

பிரசவத்தின்போது கர்ப்பிணிக்கு நேர்ந்த சோகம்.. மருத்துவமனை வளாகத்திலேயே டாக்டர் எடுத்த விபரீத முடிவு..!

சியோமி

அண்டை நாடான சீனாவை தலைமையிடமாக கொண்டு இயங்கிவரும் சியோமி நிறுவனம் எலெக்ட்ரானிக்ஸ், வீட்டு உபயோக எலெக்ட்ரானிக் சாதனங்கள் மற்றும் ஸ்மார்ட்போன் உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறது. உலக முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனங்களில் ஒன்றான சியோமி நிறுவனம் விரைவில் இந்தியாவில் மலிவான விலையில் டேப்லட்களை விற்பனை செய்ய இருப்பதாக அறிவித்து உள்ளது.

டேப்லட்

சியோமி நிறுவனம் இன்று (செவ்வாய்க்கிழமை) தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் இந்தியாவில் விரைவில் டேப்லட் விற்பனையை துவங்க இருப்பதாக அறிவித்ததுடன் அதற்கான கவுண்ட் டவுன் டைமரையும் துவங்கி உள்ளது. இதற்காக பிரத்யேக இணையதள பக்கம் ஒன்றையும் அந்த நிறுவனம் துவங்கியிருக்கிறது. இந்த டேப்லட் குறித்த தகவல்களை மக்கள் தெரிந்துகொள்ளும் வகையில் இந்த ஏற்பாட்டை அந்த நிறுவனம் செய்துள்ளது.

இருப்பினும், இந்தியாவில் வெளியாக இருக்கும் டேப்லட் மாடல் குறித்து அந்த நிறுவனம் தகவல் தெரிவிக்கவில்லை. இருப்பினும், கடந்த ஆண்டு சீனாவில் அறிமுகம் செய்யப்பட்ட MI Pad 5 டேப்லெட் சாதனத்தை சியோமி இந்தியாவில் அறிமுகம் செய்ய வாய்ப்புகள் அதிகமிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

MI Pad 5 டேப்லெட்

சீனாவில் வெளியாகி வரவேற்பை பெற்ற இந்த  MI Pad 5 டேப்லெட்டில் 8270mAh பேட்டரி, 33 வாட்ஸ் சார்ஜிங் வசதி, 6GB RAM மற்றும் 256GB வரையிலான ஸ்டோரேஜ், 13-megapixel பின்பக்க கேமரா மற்றும் 8-megapixel முன்பக்க கேமரா என அசத்தலான வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், இந்தியாவிலும் இந்த மாடலை சியோமி நிறுவனம் களமிறக்கும் பட்சத்தில் வாடிக்கையாளர்களிடைய இது மிகப்பெரிய வரவேற்பை பெறும் என்கிறார்கள் நிபுணர்கள்.

கவுண்ட் டவுன் முடிவடைந்த பிறகு இந்தியாவில் வெளியாக இருக்கும் சியாமியின் புதிய டேப்லட் குறித்த தகவல்கள், விற்பனைக்கு வெளிவரவிருக்கும் தேதி ஆகியவை வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

6000 கிமீ தூரம்.. 110 நாள் ரன்னிங்.. கின்னஸ் சாதனை படைத்த இந்திய பெண்.. யாருப்பா இந்த சுஃபியா கான்

XIAOMI, LAUNCH TABLET, INDIA, AFFORDABLE PRICE, சியோமி, டேப்லட்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்