ஆப்பிரிக்க 'தவளைய' வச்சு ரோபோக்கு 'உயிர்' கொடுத்துருக்காங்க...! இனப்பெருக்கம் செய்யும் 'உலகின்' முதல் ரோபோ...! - வியக்க வைக்கும் தகவல்கள்...!

முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்
By |

இனி ரோபோக்கள் தான் எல்லாம் துறைகளிலும் வேலைகளில் ஈடுபடும் சொன்னது போய் இப்போது இனப்பெருக்கம் வரை சென்றுள்ளது ரோபோக்களின் வாழ்க்கை.

Advertising
>
Advertising

இப்போதைய நவீன உலகில் அனைத்தும் துறைகளிலும் ரோபோக்கள் நுழைந்துள்ளன. மனிதர்கள் செய்யும் ஸ்மார்ட் வேலைகளும் சரி கடின வேலைகளும் சரி ரோபோக்கள் எளிதாக நேர மற்றும் பண செலவு குறைவாக முடித்து கொடுக்கும்.

இந்நிலையில் 'Xenobot' என்ற ரோபோ இனப்பெருக்கம்  கூட செய்யும் உலகின் முதல் உயிர் வாழும் ரோபோ என குறிப்பிடுகின்றனர் விஞ்ஞானிகள்.

இந்த 'Xenobot' ரோபோக்கள் இனப்பெருக்கம் செய்து அசத்துகின்றன. சாம் க்ரீக்மேன், டக்ளஸ் பிளாக்கிஸ்டன், மைக்கேல் லெவின், ஜோஷ் பொங்கார்ட் என நான்கு விஞ்ஞானிகள் இணைந்து இந்த ரோபோவை உருவாக்கியுள்ளனர்.

இந்த ரோபோவை உருவாக்க Xenopus laevis என்ற ஆப்பிரிக்க தவளையின் ஸ்டெம் செல்களை பயன்படுத்தி இதற்கு உயிர் கொடுத்துள்ளனர். அதனால் தான் இந்த உயிரி ரோபோவின் பெயர் Xenobot.

Xenobot ரோபோ 1 மில்லி மீட்டருக்கும் கீழான அளவில் இருக்கும் இந்த ரோபோக்கள் அருகாமையில் உள்ள செல்களை சேகரித்து தனக்கு தானே இனப்பெருக்கம் செய்து கொள்ளுமாம்.

இப்போது வரை இந்த ரோபோக்கு டிரையல் அண்ட் எர்ரர் முறையில் நடக்க, நீந்த, துகள்களை தள்ள, பளு தூக்க என தனியாகவும், குழுவாகவும் இணைந்து பணியாற்றும் டாஸ்க்குகள் இதற்கு கொடுக்கப்பட்டுள்ளனவாம்.

இந்த Xenobot உணவு இல்லாமல் ஒரு வார காலம் வரை உயிர் வாழுமாம். அதோடு, முழு சோதனைகளுக்கு பின் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் மாற்றங்களின் அடிப்படையில் இந்த மைக்ரோ ரோபோக்கள் மருத்துவ துறையில் முக்கியமான பணிகளை செய்ய உதவும் என கூறுகின்றனர் இதை கண்டுபிடித்த விஞ்ஞானிகள்.

XENOBOT, ROBOT

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்