'ஒரே ஒரு செகண்ட்ல'.. '1000 HD படங்களை' அசால்ட்டா டவுன்லோடு 'பண்லாம்'.. கனவிலும் நெனைச்சு பாக்க முடியாத 'புது இண்டர்நெட் வசதி'!

முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்
By |

‘இணையதளம் இல்லாமல் இவ்வுலகம் இல்லை’ என்கிற நிலை வந்து பல ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் இண்டர்நெட்டின் வேகத்துக்கு ஏற்ப பதிவிறக்கம் செய்யும் வேகம் அமைவதை நாம் பார்க்கிறோம்.

Advertising
Advertising

2ஜி, 3ஜி, 4ஜி அடுத்ததாக 5ஜி என இணையதளத்தின் வேகம் கூடிக்கொண்டே போவது தொழில்நுட்பத்தின் வளர்ச்சியாக கருதப்படுகிறது.  இந்நிலையில் அதிவேக இன்டர்நெட் வசதியை ஆஸ்திரேலிய ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அதுவும் எந்த அளவுக்கு அதிகமென்றால்,  ஒரு வினாடிக்கு சுமார் 1000 எச்.டி திரைப் படங்களை டவுன்லோட் செய்துகொள்ள இயலும் அளவுக்கு வேகமான இணையதள வசதியை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளார்கள்

துல்லியமாகச் சொன்னால் ஒரு வினாடிக்கு 44.2 டெராபைட் என்கிற வகையில் இந்த அதிவேக இண்டர்நெட் வேகம் உருவாக்கப்பட்டு, சோதனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை மோனோஷ் ஸ்வின் பேர்ன் மற்றும் ஆர்.எம்.ஐ.டி பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

பொதுவாக கண்ணாடி சிப் ஒன்றில் வழக்கமாக 8 லேசர்கள் பயன்படுத்துவார்கள் என்றும் இந்த லேசர்களுக்கு பதிலாக மைக்ரோ காம்ப் என்கிற புதிய சாதனத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டதால் இந்த அதிவேக இன்டர்நெட் சாத்தியப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில் உலகம் முழுவதும் இந்த வசதி செயல்பாட்டுக்கு வரும் என்று தெரிகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்