'நிரந்தரமாக.. வொர்க் ஃப்ரம் ஹோம் பண்ணா'.. 'ஃபியூச்சர்ல இந்த பிரச்சனையெல்லாம் வரும்!'.. 'ஷாக்' கொடுத்த 'CEO'!
முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்ட்விட்டர் நிறுவனம் தங்களது ஊழியர்கள் இனி நிரந்தரமாக வீட்டிலிருந்தே வேலை செய்யலாம் என்று சமீபத்தில் அறிவித்திருந்தது. இந்தநிலையில் அப்படி வேலை செய்தால் மனதளவில் கடும் விளைவுகளை அவர்கள் சந்திக்க நேரிடும் என்று மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சத்ய நாதெள்ளா தெரிவித்துள்ளார்.
கொரோனா தாக்கம் உலகம் முழுவதும் குறையாமல் அதிகரித்துக்கொண்டே இருக்கும் சூழலில் ஃபேஸ்புக், கூகுள் உள்ளிட்ட தொழில்நுட்ப தளங்களின் தலைவர்கள் பலரும் தங்களது பணியாளர்களை வீட்டிலிருந்தே பணிபுரியச் சொல்லி சலுகைகளை அளித்து வந்தனர். ஆனால் ட்விட்டர் நிறுவனமோ சற்று அகலக் கால் வைத்து, இனி பணியாளர்கள் நிரந்தரமாகவே வீட்டிலிருந்து பணிபுரியலாம் முக்கிய அலுவலகப் பணியாளர்கள் மட்டும், அலுவலகம் வந்தால் போதும், கொரோனா கால ஊரடங்கு முடிந்த பிறகும்கூட, பணியாளர்கள் வீட்டிலிருந்தே வேலை செய்வதை தொடரலாம் என்று அறிவிப்பு வெளியிட்டிருந்தது.
இந்த நிலையில் அமெரிக்க ஊடகம் ஒன்றில் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சத்யா நாதெள்ளா இது பற்றிய தனது கருத்தினை தெரிவித்துள்ளார். அதில், இதுபோன்று ஊழியர்களின் வொர்க் ஃப்ரம் ஹோம் தேர்வினை நிரந்தரமாக்கினால், அதன் மூலமாக அவர்களின் மனநிலை பாதிக்கலாம் என்றும், பணியிடங்களில் பிறருடன் பழகுவது, எப்படி ஒற்றுமையாக சேர்ந்து கூட்டு வேலைகளை செய்வது போன்ற சமூகத் தொடர்பு விஷயங்களிலிருந்து அவர்கள் விலக நேரிடும் என்றும் இதனால் பெரும் சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் நேரில் சந்திக்கும் கூட்டங்களில் இருக்கும் ஆற்றலை எப்பொழுதும் வீடியோ கால் மீட்டிங்குகள் கொடுக்க முடியாது என்றும் இது கடும் பிரச்சினைகளை பிற்காலத்தில் உண்டாக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "13.5 கோடி இந்தியர்களுக்கு வேலை பறிபோகும்!".. "இதுலயும் 12 கோடி பேரின் நிலை இதுதான்!".. 'வயிற்றில் புளியைக் கரைக்கும் அறிக்கை'!
- "30,000 ஊழியர்களை வேலைநீக்கம் செய்கிறதா எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ்?".. "முன்னணி நிறுவனங்களில் 29 லட்சம் ஏர்லைன்ஸ் ஊழியர்கள் வேலை இழக்கும் அபாயம்!" - விமான போக்குவரத்து சங்கம்!
- WorkFromHome-னு சொல்லிட்டு பாதி பேர் ‘இந்த’ வேலையதான் பாத்திருக்காங்க.. வெளியான ‘ஷாக்’ ரிப்போர்ட்..!
- 'கொரோனாவால் அதிகரித்த வொர்க் ஃப்ரம் ஹோம்!'.. ஊழியர்களுக்கு 'லேப்டாப்' கொடுக்க முடியாமல் திணறும் 'உலகின்' அதிமுக்கிய 'நிறுவனம்'!
- ஊழியர்களை 'வேலையை' விட்டு தூக்கி... 'சம்பளத்திலும்' 50% கைவைத்த 'முன்னணி' நிறுவனம்!
- லாக்டவுன்ல 'Social media' பக்கம் அதிகமா ‘இவங்க’ தான் இருங்காங்க.. ஆச்சரியம் அளித்த ‘சர்வே’ முடிவு..!
- உங்களோட 'லாஸ்ட்' வொர்க்கிங் டே ... 3 நிமிடங்கள் மட்டுமே பேசி... 3700 பேரை 'தூக்கிய' நிறுவனம்!
- 'ஆட்குறைப்பு, சம்பள குறைப்பு செய்ய மாட்டோம்'... 'பெருத்த' அடியிலும்... ஊழியர்களின் 'அச்சத்தை' போக்கியுள்ள... பிரபல 'இந்திய' நிறுவனம்!...
- “பழமையான மொழி இருக்க.. ஏன் இந்தியில் பேசுனாரு?” - இது குஷ்பு. “ஜோக்கர்.. அவர் பேசுனது தமிழ்நாட்டுக்கு மட்டும் அல்ல!” - இது காயத்ரி! அனல் பறக்கும் ட்வீட்ஸ்!
- 'அதிர்ச்சியூட்டும்' செய்திகளால் 'பாதிக்கப்பட்ட' ஊழியர்களுக்கு... 'இழப்பீட்டுடன்' மனநல ஆலோசனை.... 'ஒப்புக்கொண்ட' பிரபல நிறுவனம்...