இந்த போன்களில் இனி 'வாட்ஸ்அப்' எடுக்காது..செம 'ஷாக்' கொடுத்த வாட்ஸ்அப்!

முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்
By |

உலகமெங்கும் கோடிக்கணக்கான மக்களால் வாட்ஸ்அப் பயன்படுத்தப்படுகிறது.சாட் செய்ய வீடியோ அனுப்ப, ஆடியோ-வீடியோ கால் என பல வடிவங்களிலும் வாட்ஸ்அப் சேவையை மக்கள் பயன்படுத்துகின்றனர். இந்த நிலையில் வரும் 2020-ம் ஆண்டு பிப்ரவரி முதல் குறிப்பிட்ட சில போன்களில் வாட்ஸ்அப் சேவை செயல்படாது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

நீண்ட காலமாக இயங்குதளத்தை புதிய பதிப்பிற்கு அப்டேட் செய்யாத ஐபோன் பயனர்கள் மற்றும் ஆண்ட்ராய்டு பயனர்களின் போன்களில் வருகிற பிப்ரவரி 1-ம் தேதி முதல் வாட்ஸ்அப் செயல்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.குறிப்பாக ஐபோன் iOS 8 இயங்குதளத்தில் இயங்கும் ஐபோன்கள் மற்றும் ஆண்ட்ராய்டு 2.3.7 இயங்குதளத்தில் இயங்கும் போன்களுக்கு வாட்ஸ் அப் இனி எடுக்காது.

தற்பொழுது ஆண்ட்ராய்டு 2.3.7 இயங்குதளம் மற்றும் ஐபோன் iOS 8 இயங்குதளத்தில் வாட்ஸ்அப் இயங்கிக்கொண்டிருக்கிறது. இதில் எந்த மாற்றமும் இப்பொழுது இல்லை. ஆனால் பிப்ரவரி 1 முதல் மேற்கண்ட போன்களில் வாட்ஸ்அப் செயல்படாது.இதனால் அப்டேட் செய்யாத ஐபோன் பயனர்கள் உடனடியாக தங்களது இயங்குதளத்தை IOS 9 இயங்குதளத்திற்கு மேம்படுத்திக் கொள்ளுமாறு தெரிவித்துள்ளது.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்