மத்திய அரசு விதித்த புதிய விதிகளுக்கு எதிராக ‘WhatsApp’ போர்கொடி..! வெளியான பரபரப்பு தகவல்..!
முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்சமூக ஊடகங்களுக்கான புதிய விதிமுறைகள் தொடர்பான விவகாரத்தில் இந்திய அரசுக்கு எதிராக வாட்ஸ்அப் நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சமூக ஊடகங்கள், ஓடிடி சேவைகளுக்கு புதிய கட்டுப்பாட்டு விதிமுறைகள் கடந்த பிப்ரவரி மாதம் 25-ம் தேதி மத்திய அரசு வெளியிட்டது. இந்த விதிமுறைகளை அமல்படுத்த மூன்று மாதங்கள் அவகாசம் அளிக்கப்பட்டது. இதற்கான காலக்கெடு நேற்றுடன் முடிவடைந்த நிலையில் பேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட நிறுவனங்கள் இதுதொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என கூறப்படுகிறது.
மத்திய அரசு வெளியிட்டுள்ள புதிய விதிமுறைகளை பின்பற்றவில்லை எனில் சமூக ஊடக நிறுவனங்கள், டிஜிட்டல் இடைமுகவர்கள் எனும் அந்தஸ்தை இழக்க வேண்டியிருக்கும். அதன் பிறகு, பிரச்சனை என வரும்போது அவை கிரிமினல் நடவடிக்கைக்கும் உள்ளாக வாய்ப்புள்ளது. இதனால் இந்தியாவில் பேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக ஊடக சேவைகளின் செயல்பாடு தொடர்பாக பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
இதனிடையே, புதிய விதிமுறைகளை செயல்படுவத்துவது தொடர்பாக நடவடிக்கை எடுக்க இருப்பதாக பேஸ்புக் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூகுள் நிறுவனமும் இதே தகவலை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக மத்திய அரசுடன் பேச்சு நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்த விவகாரத்தில் திடீர் திருப்பமாக புதிய விதிமுறைகளை எதிர்த்து வாட்ஸ்அப் நிறுவனம் தரப்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. பேஸ்புக்கின் துணை நிறுவனமான வாட்ஸ்அப், டெல்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருப்பதாக ராய்ட்டர்ஸ் (Reuters) செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இது சமூக ஊடக உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'புதிய பாலிசிய ஏற்கலன்னா...' 'உங்க அக்கவுண்ட கேன்சல் பண்ண மாட்டோம், ஆனா...' - வாட்ஸ் அப் நிறுவனம் நிறுவனம் வெளியிட்டுள்ள 'அதிரடி' தகவல்...!
- 'WhatsApp-வில் யாராவது லெந்தா பேசுறாங்களா'?... 'இனிமேல் அதற்கு விடுதலை'... WhatsApp கொடுக்கவுள்ள அல்டிமேட் அப்டேட்!
- 'வாட்ஸ்அப் புதிய பிரைவசி பாலிசிய ஏற்கலன்னா...' 'மே 15-க்கு அப்புறம் வாட்ஸ்அப் என்ன ஆகும்...? - புதிய தகவல்...!
- 'Hi-னு ஒரு மெசேஜ் மட்டும் வாட்ஸ்ஆப்ல தட்டி விடுங்க...' 'சொந்த ஊருல வேலை இருக்குன்னா தேடி வரும்...' 'விரிவான விவரங்கள்...' - பிரமாதமான அறிவிப்பை வெளியிட்ட TIFAC...!
- உஷாரான வாட்ஸ் அப்!.. திடீரென ஸ்டேட்டஸ் மூலம் 'அதிரடி' அறிவிப்பு!.. குழப்பத்தில் பயனாளர்கள்!.. என்ன நடக்கிறது?
- “இந்த பீக் டிராஃபிக்கை சமாளிக்க முடியல..Underdog படத்துல வர்ற மாதிரி!”.. ‘வாட்ஸ் ஆப் சர்ச்சையால்’ மொத்தமாக ‘படையெடுத்த’ பயனாளர்கள்.. திணறிப் போன ‘பிரபல’ செயலி.. இப்போது சொன்ன நற்செய்தி!
- '500 மில்லியன் பயனர்கள்!'.. கடந்த 72 மணி நேரத்தில் 25 மில்லியன் பேர் இணைந்தனர்!.. ‘வாட்ஸ் ஆப்.. சிக்னல்.. டெலிகிராம்’.. செயலிகளிடையே தொடங்கிய மும்முனைப் போட்டி!
- 'வாட்ஸ்அப், ஃபேஸ்புக் ரெண்டையுமே BAN பண்றோம்...' 'எலக்சனுக்கு ரெண்டே நாள் தான் இருக்கும் நிலையில்...' - அதிரடியாக அறிவித்த நாடு...!
- ‘புதிய பிரைவேசி பாலிசி சர்ச்சை’.. “100% தெளிவாகுங்கள்.. எங்க நோக்கம் இதுதான்!” - WhatsApp-ன் அதிகாரப்பூர்வ விளக்கம்!
- அதிரவைக்கும் 'வாட்ஸ் அப்'-இன் புதிய ரூல்ஸ்!.. புரியாமல் மாட்டிக் கொள்ளும் பயனாளர்கள்!.. 'பிப்ரவரி 8'க்கு பின் என்ன நடக்கும்?.. விரிவான தகவல்!