“இல்ல.. இல்ல... அந்த ஐடியாவ நிறுத்துறோம்!”... “வாட்ஸ் ஆப் அறிவிப்பு!”.. “காரணம் இதுதான்!”

முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்
By |

இணையதளத்தின் உதவியோடு குறுந்தகவல்கள், வீடியோ, ஆடியோ உள்ளிட்டவற்றை பரிமாறிக்கொள்ள உதவும், நவீன காலத்தின் தவிர்க்கமுடியாத செயலி வாட்ஸ்ஆப்.

பல்வேறு புதிய வசதிகளுடன் கூடிய இந்த வாட்ஸ்ஆப், கடந்த 2018ம் ஆண்டு பேஸ்புக் நிறுவனத்தால் வாங்கப் பெற்றது. வாட்ஸ்ஆப்பை, ஃபேஸ்புக் நிர்வாகிக்கத் தொடங்கியதிலிருந்து இன்னும் பல மாற்றங்கள், அந்த செயலியில் கொண்டு வரப்பட்டன.

அவ்வரிசையில் வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸ் மூலம் விளம்பரங்கள் வெளியாவதற்கான புதிய முயற்சியை மேற்கொள்ளவிருப்பதாக பேஸ்புக் நிறுவனம் முன்னர் அறிவித்திருந்தது. தற்போது இந்த முயற்சி கைவிடப்படுவதாக  அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்காக தொடங்கப்பட்ட குழுவும் கலைக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ்ஆப் செயலியை உருவாக்கிய ஜேன் கோம் மற்றும் பிரைன் விளங்குவதாலும், வாட்ஸ் ஆப்பின் இந்த அப்டேட்டினால் வாடிக்கையாளர்கள் அதிருப்தி அடைய வாய்ப்பு இருப்பதாலும் இந்த முயற்சி கைவிடப்பட்டு இருக்கலாம் என்று தெரிகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்