'இந்தியாவில் 'வாட்ஸ் அப் பே'க்கு கிரீன் சிக்னல்'... 'கூகுள் பே, பேடிஎம்-க்கு கடும் போட்டி'... அப்படி என்ன இதில் ஸ்பெஷல்!
முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்பேஸ்புக் நிறுவனத்திற்குச் சொந்தமான வாட்ஸ் அப் என்பது உலகம் முழுவதும் மிகவும் பிரபலம். தற்போது வாட்ஸ் அப் செயலியைப் பயன்படுத்தாதவர்கள் மிகவும் குறைவு என்ற அளவுக்கு, குறுஞ்செய்தியில் அனைத்து விவரங்களையும் கொண்டு சேர்க்கும் அளவிற்கு வாட்ஸ் அப் அத்தியாவசியமான ஒன்றாக மாறிவிட்டது. இந்தச் செயலியை இந்தியா முழுவதும் சுமார் 40 கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் வாட்ஸ் அப் மூலம், பணப் பரிமாற்றத்தை மேற்கொள்ளும் வசதிகள் குறித்த ஆய்வுகள் கடந்த ஓராண்டாகவே நடைபெற்று வந்தன. இதில் 10 லட்சம் பயனாளிகளின் வாட்ஸ் அப் கணக்குகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. பயனாளர்களின் பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் இதில் ஆய்வு செய்யப்பட்டது. இந்த நிலையில், யுபிஐ மூலமாக பணப்பரிவர்த்தனை சேவைகளை வாட்ஸ் அப் வழங்க மத்திய அரசின் என்.பி.சி.ஐ அனுமதி அளித்துள்ளது. ஏற்கனவே கூகுள் பே, பேடிஎம், போன் பே போன்ற செயலிகள் பணப்பரிமாற்றத்துக்குப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த சூழ்நிலையில் வாட்ஸ் அப் பேவும் இந்த போட்டியில் குதித்துள்ள நிலையில் பணப் பரிமாற்றம் என்பது மிகவும் எளிதான ஒன்றாக மாறிவிடும் எனக் கூறப்படுகிறது. வாட்ஸ் அப் ஏற்கனவே மக்கள் மத்தியில் பிரபலம் என்பதோடு, இந்த செயலியைப் பலரும் பயன்படுத்தி வருகிறார்கள். இது வாட்ஸ் அப் பேக்கு கூடுதல் சாதகமாக அமைந்துள்ளது. எனவே வாட்ஸ் அப் பே மீதான நம்பக தன்னை என்பது மக்களிடையே அதிகமாகவே காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோன்று வாட்ஸ் அப் பேவின் வரவு மற்ற செயலிகளுக்கும் பெரும் நெருக்கடியைக் கொடுக்கும் என எதிர்பார்க்கலாம். இதற்கிடையே வாட்ஸ் அப் பே சேவைக்கு இந்தியாவில் அனுமதி கிடைத்திருப்பது குறித்து பேஸ்புக் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் கூறும் போது, இந்தியா முழுவதும் வாட்ஸ் அப் பே சேவைக்கு, ஒப்புதல் அளிக்கப்பட்டிருப்பதில் மகிழ்ச்சியடைவதாகவும், இதை சாத்தியமாக்கிய அனைத்து தரப்பினருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். வாட்ஸ் அப் மூலமாக உங்கள் நண்பர்களுக்கும் குடும்பத்தினருக்கும் எந்த கட்டணமும் இன்றி நீங்கள் பணம் செலுத்த முடியும். இந்த பரிவர்த்தனை மிகவும் பாதுகாப்பானது” என்று தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- வீட்டிலிருந்து திடீரென மாயமான 2 ‘இளம்பெண்கள்’.. வாட்ஸ் அப்புக்கு வந்த ஒரே ஒரு ‘மெசேஜ்’.. ஆடிப்போன பெற்றோர்கள்..!
- இதுல இவ்ளோ விஷயம் இருக்கா?.. 'வாட்ஸ் ஆப்பின் புதிய அம்சம் அறிமுகம்!'.. முழு விபரம்!
- 'போன வருஷம் நடந்த நகை திருட்டுக்கும்...' 'பக்கத்து வீட்டு பெண் வைத்த வாட்ஸ்அப் ஸ்டேட்டஸுக்கும் இருந்த ஸ்பெஷல் கனெக்ட்...' - அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி...!
- "என்னோட போட்டோ தான், ஆனா...!" - 'வாட்ஸ் அப், பேஸ்புக்ல வலம் வந்த பகீர் விளம்பரத்தால்'... 'உறைந்து நின்ற ஐடி பெண்!!!' - அதிர்ச்சி சம்பவம்!
- 'மொதல்ல pay பண்ணுங்க மேடம்...' 'காசு அனுப்பிய அடுத்த செகண்ட் வாட்ஸ்அப் குரூப்ல இருந்து தூக்கிய அட்மின்...' - ஆன்லைன் தில்லாலங்கடிகள் செய்த மோசடி...!
- 'பிரிட்ஜ்ல 3 பீசா துண்டுகள் இருக்கு'.. நீங்க என் அம்மாவாக இருந்தால், உண்மையிலே என் மேல பாசம் இருந்தா'.. அதிகாலை 4 மணிக்கு மகள் அனுப்பிய வாட்ஸ் ஆப் மெசேஜ்!.. 'தலைசுத்தி' நின்ற தாய்!
- 'ரியா அளித்துள்ள திடீர் புகாரால் பரபரப்பு'... 'சுஷாந்த் வழக்கில்'... 'புதிய திருப்பமாக வெளியாகியுள்ள வாட்ஸ்அப் உரையாடல்!'...
- 'பள்ளி' மாணவர்களின் 'ஆன்லைன்' வகுப்பில்.. 'அடுத்தடுத்து' நடந்த 'அதிர்ச்சி' சம்பவம்!.. 'வியர்த்து விறுவிறுத்து' நின்ற ஆசிரியர்கள்!
- 'வாட்ஸ் அப்' திறக்கவே முடியல!.. அவ்ளோ ஆபாச வீடியோக்கள்!'.. 'இந்த முறை Block பண்ணல... ஆசையா ஒரு Reply வந்துச்சு'!.. சென்னைப் பெண் தரமான சம்பவம்!
- ‘உயிர் போகும் நிலையிலும்... காதலுக்காக இந்த கடைசி முத்தங்கள்!’.. ‘வாட்ஸ் ஆப்பில் வீடியோ வெளியிட்டு’ இளம் பெண் செய்த ‘பதைபதைப்பு’ காரியம்!