ஆஹா Whatsapp பயனாளர்களுக்கு மார்க் கொடுத்த சர்ப்ரைஸ்..? குரூப் கால் வசதியில் வரும் தாறுமாறான அப்டேட்..!
முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்உலகம் முழுவதிலும் கோடிக்கணக்கான மக்கள் வாட்சப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர்.
வாட்சப்
இதில் பயனாளர்களின் பாதுகாப்பையும், வசதியை அதிகரிக்க அடிக்கடி அப்டேட்களை வாரி வழங்கிவருகிறது வாட்சப் நிறுவனம். அந்த வகையில் தற்போது, ஒரே வாட்சப் காலில் 32 பேர் வரை இணையும் வகையில் அப்டேட் ஒன்றை அந்நிறுவனம் அளிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. முன்னதாக வாட்சப் காலில் 8 பேர் மட்டுமே இணைய முடியும். ஆனால், இந்த அப்டேட் வந்தால் ஒரே நேரத்தில் 32 பேர் க்ரூப் காலில் இணையலாம்.
வழக்கமான Calls பகுதியில் லிங்க் உருவாக்கும் வசதிகள் அளிக்கப்படும் என அந்நிறுவனம் தெரிவித்திருக்கிறது. மேலும், நீங்கள் காலில் இணைக்க வேண்டிய நபர்களுக்கு அந்த லிங்கை பகிர்ந்தால் போதுமானது. அவர்கள் அந்த லிங்கை கிளிக் செய்தவுடன் க்ரூப் காலில் இணைவார்கள்.
அறிவிப்பு
இதுதொடர்பாக வாட்சப் நிறுவனத்தின் தாய் நிறுவனமான மெட்டா குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஸக்கர்பெர்க் வெளியிட்டுள்ள அறிவிப்பில்," இந்த வாரம் முதல் வாட்சப்பில் 'கால் லிங்க்' அம்சத்தை வெளியிடுகிறோம், இதன் மூலம் நீங்கள் ஒரே கிளிக்கில் அழைப்பில் சேரலாம். மேலும் 32 பேர் வரை பாதுகாப்பான 'என்கிரிப்டெட்' வீடியோ அழைப்பையும் நாங்கள் சோதித்து வருகிறோம்" எனக் குறிப்பிட்டுள்ளார். வாட்சப்பின் இந்த சேவையை பயன்படுத்த, நீங்கள் உங்களது வாட்சப் செயலியை அப்டேட் செய்யவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்னொரு சர்ப்ரைஸ்
முன்னதாக வாட்சப்பில் மற்றொரு வசதியும் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. அதில், ஆன்லைன் ஸ்டேட்டஸ் (Last seen and online)-ஐ குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் தெரியும்படி செய்யும் வசதியை வாட்சப் நிறுவனம் அளிக்கிறது. முன்னர், வாடிக்கையாளர்கள் தங்களது காண்டாக்ஸ்-ல் (my Contacts) உள்ள நபர்களுக்கு மட்டும் தங்களது வாட்சப் ஆன்லைன் ஸ்டேட்டஸ் தெரியுமாறு வைக்கலாம் அல்லது யாருக்கும் தெரியாதவாறு Nobody ஆப்ஷனை தேர்வு செய்யலாம்.
ஆனால், இந்த அப்டேட்டின் மூலம் உங்களது Last seen and online-ஐ யாரெல்லாம் பார்க்கலாம் என்று தேர்வு செய்து அவர்களுக்கு மட்டும் அதனை காட்டும்படி செய்துகொள்ளலாம். இந்த வசதியும் இந்த வாரத்தில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் எனத் தெரிகிறது. இதனால் வாட்சப் பயனாளர்கள் குஷியில் உள்ளனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- வாட்ஸ் அப்பில் வந்த லிங்க்.. "அத க்ளிக் பண்ண கொஞ்ச நேரத்துல".. வங்கி கணக்கு பத்தி வந்த மெசேஜ்.. அதிர்ந்து போன பெண்!!
- WhatsApp-ல் வர இருக்கும் 3 முக்கிய அம்சங்கள்.. மார்க் ஸக்கர்பெர்க் வெளியிட்ட அறிவிப்பு.. ஜாலி மோடில் நெட்டிசன்கள்..!
- முதல்'ல பேஸ்புக், அப்புறமா வாட்ஸ்அப்'ல.. வீடியோ காலில் வந்த பெண்??.. மறுநாளே தலையில் விழுந்த துண்டு
- வாட்சாப் அக்கவுண்ட்டை வாடகைக்கு விட்டு காசு பார்த்த திண்டுக்கல் இளைஞர்.. வீடுதேடி வந்த கொல்கத்தா காவல்துறை..திகைக்க வைக்கும் பின்னணி.!
- வாட்சாப்பில் லட்ச கணக்கில் பணம் கேட்ட மகள்.. அம்மாவுக்கு காத்திருந்த அதிர்ச்சி.. "குட்நைட்" மெசேஜால் வெளிச்சத்துக்கு வந்த உண்மை..!
- எதுக்கு என் நம்பரை Block செஞ்ச?.. நண்பனின் வீட்டுக்கு வந்து கேள்விகேட்ட இளம்பெண் செஞ்ச பகீர் காரியம்..!
- ‘முதல்ல எமோஜி அப்டேட்.. இப்போ இதுவா..’ அடுத்தடுத்து பயனர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் WhatsApp..!
- வாட்ஸ் அப்பில் வந்தாச்சு செம அப்டேட்.. "இனி Chatting சும்மா பட்டையை கெளப்பும்.."
- அடடே! குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் Last Seen-அ மறைக்கலாமா?. செம வாட்சாப்பில் வரும் புதிய வசதி.. உற்சாகத்தில் மக்கள்..!
- போடு சக்க.. வாட்ஸாப்பில் இப்படி ஒரு புதிய வசதியா?.. யாருக்கெல்லாம் Applicable?