அடடே! குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் Last Seen-அ மறைக்கலாமா?. செம வாட்சாப்பில் வரும் புதிய வசதி.. உற்சாகத்தில் மக்கள்..!

முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்
By |

பிரபல சமூக வலை தளமான வாட்சாப், புதிய வசதி ஒன்றினை தனது பயனாளர்களுக்கு அளிக்க இருக்கிறது.

Advertising
>
Advertising

Also Read | "World-Class பஸ் ஸ்டாப் இது".. ஆனந்த் மஹிந்திரா ஷேர் செஞ்ச வீடியோ.. பேருந்து நிறுத்தத்தில் இவ்வளவு வசதிகளா? வாயை பிளந்த நெட்டிசன்கள்..!

உலகமெங்கிலும் கோடிக்கணக்கான மக்களால் பயன்படுத்தப்பட்டுவரும் வாட்சாப் அப்ளிகேஷன் புதிய அப்டேட் ஒன்றினை அளிக்க இருக்கிறது. தனது பயனாளர்களின் நெடுநாள் கோரிக்கைகளை நிறைவேற்றி வரும் வாட்சாப் விரைவில் லாஸ்ட் சீன் அமைப்பிலும் புதிய மாற்றத்தை  புகுத்த இருக்கிறது.

லாஸ்ட் சீன்

வாட்சாப்பில் நாம் கடைசியாக எப்போது அப்ளிகேஷனை பயன்படுத்தியிருக்கிறோம் என்பதை பிறர் அறிந்துகொள்ளும் வசதியே இந்த லாஸ்ட் சீன். இதனை காண்டாக்ட்டில் இருப்பவர்கள் மட்டுமே பார்க்கும் வசதி ஏற்கனவே இருந்துவந்த நிலையில், குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் லாஸ்ட் சீனை மறைக்கும் வசதியை அறிமுகப்படுத்த இருக்கிறது வாட்சாப்.

இந்த வசதி, தற்சமயம் iOS 22.9.0.70 உபயோகிக்கும் வாட்சாப் பீட்டா பயனர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. விரைவில் அனைத்து வாட்சாப் பயனாளர்களுக்கும் இந்த வசதி அளிக்கப்படும் எனத் தெரிகிறது.

வாட்சாப் Settings-ல் உள்ள Privacy க்கு சென்று பயனாளர்கள் My Contacts except என்பதை தேர்வு செய்து யாருக்கெல்லாம் லாஸ்ட் சீன் காட்ட வேண்டாமோ அவர்களை தேர்ந்தெடுக்கலாம். இதற்கு முன்பு இதில் Everyone, My contact, and Nobody இவை மட்டுமே கொடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

கூடுதல் சிறப்பம்சங்கள்

லாஸ்ட் சீன் போலவே, புரொஃபைல் பிக்சர், About மற்றும் வாட்சாப் ஸ்டேட்டஸ் ஆகியவற்றையும் குறிப்பிட்ட சிலர் மட்டுமே காணும் வகையில் இந்த அப்டேட் உதவும். சமீபத்தில் 5 புதிய அப்டேட்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டது வாட்சாப். அதன்படி வாட்சாப் குழுக்களை ஒன்றாக இணைக்கும் ‘கம்யூனிட்டிஸ்’ அம்சம், 2ஜிபி சைஸ் ஃபைல் ஷேரிங் , ஆடியோ கால்களில் கூடுதல் நபர்கள் இணையும் வசதி, வாட்சாப் குரூப் அட்மின்களுக்கு கூடுதல் அதிகாரம், எமோஜி ரியாக்ஷன் என அடுத்தடுத்து வரவிருக்கும் புதிய அப்டேட்களால் வாட்சாப் பயனாளர்கள் குஷியில் உள்ளனர்.

Also Read | "மனிதநேயத்துக்காக வாழ்க்கையையே அர்ப்பணித்தவர்".. பிரதமர் மோடி பாராட்டிய பாகிஸ்தான் பெண்..யார் இவர்?

WHATSAPP, WHATSAPP NEW UPDATE, HIDING LAST SEEN FOR SPECIFIC CONTACTS, வாட்சாப் அப்ளிகேஷன், லாஸ்ட் சீன்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்