"இனி Delete For Me குடுத்தாலும் கவலை இல்ல".. வாட்ஸ் ஆப் கொண்டு வந்த செம வசதி..?
முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்இன்றைய காலகட்டத்தில் அனைவரின் கைகளிலும் ஆண்ட்ராய்டு மொபைல் மற்றும் ஐபோன்கள் உள்ளது. இதனால், அனைவரும் பல விதமான செயலிகளையும் தங்கள் செல்போன்களில் பயன்படுத்தி வருகின்றனர்.
அப்படி இருக்கையில் பலருக்கும் அத்தியாவசியமாக அதே வேளையில் முக்கியத்துவம் வாய்ந்த சில செயலிகள் இருக்கும். அதில் மிகவும் குறிப்பான ஒன்று தான் மெட்டாவுக்கு சொந்தமான வாட்ஸ்அப் செயலி.
உலக அளவில் கோடிக்கணக்கான மக்கள் இந்த Whatsapp செயலியை பயன்படுத்தி வரும் நிலையில் உறவினர்கள், குடும்பத்தினர்கள் மற்றும் நண்பர்கள் என பலரிடம் பேசவும், போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் உள்ளிட்ட பலவிதமான ஃபைல்களை பகிர்ந்து கொள்ளும் வசதிகள் உள்ளிட்டவை வாட்ஸ் அப்பில் இருப்பதால் பலரின் ஃபேவரைட் செயலியாகவும் இது உள்ளது.
அதுமட்டுமில்லாமல், நாட்கள் செல்ல செல்ல பயனர்களை கவரும் வகையில் புது புது அம்சங்களும், அப்டேட்களையும் வாட்ஸ்அப் செயலி வெளியிட்டு கொண்டே தான் இருக்கின்றன. அப்படி ஒரு சூழலில் தற்போது வாட்ஸ் அப்பில் புதிதாக அறிமுகமாகி உள்ள வசதி குறித்த செய்தி, அதிக வைரலாகி வருகிறது.
முன்னதாக வாட்ஸ்அப் செலியில் ஒரு குரூப்பில் அல்லது தனிப்பட்ட நபருக்கு தவறுதலாக ஒரு மெசேஜ் அனுப்பும் பட்சத்தில் அதை "Delete For Everyone" என கொடுத்து அதை நாம் அனுப்பிய நபர் பார்க்காதவாறு செய்து விட முடியும். ஆனால் சிலர் Delete For Everyone அழுதுவதற்கு பதிலாக, Delete For Me என்பதை தேர்வு செய்து விடுகின்றனர். அப்படி கொடுக்கும் போது நாம் தவறுதலாக அனுப்பிய மெசேஜ் அனுப்பிய நபர் பார்க்கும் வகையில் அமைத்து விடும். இதன் காரணமாக, ஏராளமான வாட்ஸ்அப் பயனர்கள் அவதிப்பட்டும் வருகின்றனர்.
அப்படி ஒரு சூழலில், பயனர்கள் அவதிப்படுவதை தடுப்பதற்காக புதிய அப்டேட் ஒன்றை மெட்டா கொண்டு வந்துள்ளது. அதன்படி Delete For Me என தவறுதலாக கொடுத்த மெசேஜை Undo என கொடுத்து திரும்ப பெற்றுக் கொள்ள முடியும். இதனைத் தொடர்ந்து, அந்த மெசேஜை Delete For Everyone கொடுக்க விரும்பினால் கொடுத்துக் கொள்ளலாம்.
அதற்கான ஆப்ஷன் ஐந்து நொடிகள் திரையில் தோன்றும். இந்த ஐந்து நொடிகளுக்குள் தவறுதலாக Delete For Me கொடுத்த குறுஞ்செய்தியை Delete For Everyone கொடுத்து விடலாம். ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் பயனர்கள் அனைவருக்கும் இந்த புதிய அப்டேட் வழங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ஆஹா Whatsapp பயனாளர்களுக்கு மார்க் கொடுத்த சர்ப்ரைஸ்..? குரூப் கால் வசதியில் வரும் தாறுமாறான அப்டேட்..!
- வாட்ஸ் அப்பில் வந்த லிங்க்.. "அத க்ளிக் பண்ண கொஞ்ச நேரத்துல".. வங்கி கணக்கு பத்தி வந்த மெசேஜ்.. அதிர்ந்து போன பெண்!!
- WhatsApp-ல் வர இருக்கும் 3 முக்கிய அம்சங்கள்.. மார்க் ஸக்கர்பெர்க் வெளியிட்ட அறிவிப்பு.. ஜாலி மோடில் நெட்டிசன்கள்..!
- முதல்'ல பேஸ்புக், அப்புறமா வாட்ஸ்அப்'ல.. வீடியோ காலில் வந்த பெண்??.. மறுநாளே தலையில் விழுந்த துண்டு
- வாட்சாப் அக்கவுண்ட்டை வாடகைக்கு விட்டு காசு பார்த்த திண்டுக்கல் இளைஞர்.. வீடுதேடி வந்த கொல்கத்தா காவல்துறை..திகைக்க வைக்கும் பின்னணி.!
- வாட்சாப்பில் லட்ச கணக்கில் பணம் கேட்ட மகள்.. அம்மாவுக்கு காத்திருந்த அதிர்ச்சி.. "குட்நைட்" மெசேஜால் வெளிச்சத்துக்கு வந்த உண்மை..!
- எதுக்கு என் நம்பரை Block செஞ்ச?.. நண்பனின் வீட்டுக்கு வந்து கேள்விகேட்ட இளம்பெண் செஞ்ச பகீர் காரியம்..!
- ‘முதல்ல எமோஜி அப்டேட்.. இப்போ இதுவா..’ அடுத்தடுத்து பயனர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் WhatsApp..!
- வாட்ஸ் அப்பில் வந்தாச்சு செம அப்டேட்.. "இனி Chatting சும்மா பட்டையை கெளப்பும்.."
- அடடே! குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் Last Seen-அ மறைக்கலாமா?. செம வாட்சாப்பில் வரும் புதிய வசதி.. உற்சாகத்தில் மக்கள்..!