‘இனி’ வாட்ஸ்அப்பில் ‘இதெல்லாம்’ ரொம்ப ‘ஈஸி’... 2020-ல் அறிமுகமாகும் ‘அசத்தல்’ அப்டேட்டுகள்...

முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்
By |

வாட்ஸ்அப் 2020ஆம் ஆண்டில் வாடிக்கையாளர்களைக் கவர பல புதிய அப்டேட்டுகளை அறிமுகம் செய்ய உள்ளது.

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனாளர்களைக் கொண்ட செயலியான வாட்ஸ்அப் அதன் பயனாளர்களைக் கவர தொடர்ந்து பல அசத்தல் அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. அந்த வரிசையில் வரும் 2020ஆம் ஆண்டு டார்க் மோட், ஃபேஸ் அன்லாக், மல்டிபுள் டிவைஸ் சப்போர்ட், டெலிட் மெசேஜ், லாஸ்ட் சீன் ஃபார் செலெக்ட் ஃபிரண்ட்ஸ் என பல புதிய அப்டேட்டுகளை அறிமுகம் செய்ய உள்ளது.

நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட வசதியான டார்க் மோட் (Dark Mode) அம்சத்தில் வாட்ஸ்அப் 3 சாய்ஸ்களை வழங்குகிறது. அவை லைட் தீம், டார்க் தீம், பேட்டரி சேவர். இந்த வசதி செட்டிங்க்ஸ் மெனுவில் டார்க் மோட் எனக் கொடுக்கப்பட்டிருக்கும். அடுத்த அப்டேட்டான ஃபேஸ் அன்லாக் (Face Unlock) மூலம் பயனாளர்கள் தங்கள் வாட்ஸ்அப் சாட்களை மற்றவர்கள் பார்ப்பதை எளிதில் தடுக்க முடியும். இதன்மூலம் ஸ்மார்ட் ஃபோன்களில் செல்ஃபி மூலம் அன்லாக் செய்வதைப் போலவே வாட்ஸ்அப்பிலும் செய்ய முடியும்.

முன்னதாக, ஒரு ஸ்மார்ட் ஃபோனில் ஒரு வாட்ஸ்அப் ஐடியை மட்டுமே பயன்படுத்த முடியும். தற்போது மல்டிபுள் டிவைஸ் சப்போர்ட் (Multiple Device Support) வசதி மூலமாக, பயனாளர் தனது வாட்ஸ்அப் ஐடியை ஒன்றுக்கும் மேற்பட்ட ஸ்மார்ட் ஃபோன்களில் பயன்படுத்த முடியும். அடுத்த அப்டேட்டான டெலிட் மெசேஜ் (Delete Messages) மூலமாக பயனாளர்கள் தாங்கள் அனுப்பிய மெசேஜ்களை குறிப்பிட்ட நேரத்திற்குப் பிறகு தானாகவே டெலிட் ஆகும்படி செய்ய முடியும்.

வாட்ஸ்அப்பில் தற்போதுள்ள லாஸ்ட் சீன் ஆப்ஷன் மூலமாக கடைசியாக பயனாளர்கள் வாட்ஸ்அப் உபயோகித்த நேரத்தை தங்கள் கான்டாக்டில் உள்ளவர்கள் அனைவரும் பார்க்கும்படி மட்டுமே வைக்க முடியும். ஆனால் புதிதாக வரவுள்ள லாஸ்ட் சீன் ஃபார் செலெக்ட் ஃபிரண்ட்ஸ் (Last Seen For Select Friends) அப்டேட் மூலமாக பயனாளர் செட் செய்யும் குறிப்பிட்ட சில நண்பர்கள் மட்டும் தங்களுடைய லாஸ்ட் சீன் நேரத்தை பார்க்குமாறு செய்ய முடியும்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்