‘புதிய பிரைவேசி பாலிசி சர்ச்சை’.. “100% தெளிவாகுங்கள்.. எங்க நோக்கம் இதுதான்!” - WhatsApp-ன் அதிகாரப்பூர்வ விளக்கம்!

முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்
By |

அண்மையில் பேஸ்புக் நிறுவனத்தில் ஒரு அங்கமான வாட்ஸ் ஆப் புதிய தனியுரிமைக் கொள்கையை அறிமுகப் படுத்தியது. இந்த புதிய தனியுரிமை கொள்கையினால் பயனாளர்கள் பலரும் அச்சப்படுவதாக தொடர்ந்து சமூக வலைதளங்களில் கூறி வந்தனர்.

அதாவது பயனாளர்களின் தரவுகளை மற்றும் விவரங்களை வாட்ஸ் ஆப் கண்காணிக்கும் அல்லது பகிரும் என்று பலரும் இது பற்றி தங்களுடைய அச்சத்தை கருத்துக்களாக வெளிப்படுத்தி வந்தனர். அத்துடன் வாட்ஸ் ஆப்புக்கு மாற்றாக இருக்கும் மற்ற செயலிகளை பற்றி தேடவும் தொடங்கினர். இந்த நிலையில் வாட்ஸ் ஆப் பிரைவசி விவகாரத்தில் தற்போது வாட்ஸ் ஆப் நிறுவனம் அதிகாரப்பூர்வ விளக்கம் அளித்து ட்விட்டரில் பதிவை வெளியிட்டுள்ளது.

அந்த விளக்கத்தில், “பயனாளர்களின் தனிப்பட்ட தகவல்களை, அழைப்புகளை வாட்ஸ் ஆப் கண்காணிக்காது. இவற்றைப் ஃபேஸ்புக்கும் செய்யாது. பயனாளர்களின் தொடர்பு விபரங்கள் எதையும் வாட்ஸ் ஆப் சேமித்து வைக்காது. பயனர் ஒருவர் பகிர்ந்த இருப்பிட விபரத்தையும் வாட்ஸ் ஆப் பார்க்காது. அதேபோல் ஃபேஸ்புக்கும் இதைச் செய்யாது.

பயனாளர்களின் தொடர்பு எண்களை வாட்ஸ் ஆப் ஃபேஸ்புக்குடன் பகிராது. தொடர்ந்து வாட்ஸ் ஆப் குழுக்கள் தனிப்பட்ட முறையில் செயல்படும். பயனாளர்களே ஒரு குறிப்பிட்ட காலத்துக்குப் பின்னர் அவர்களின் மெசேஜ்களை மறைத்துக் கொள்ளலாம். குறிப்பாக பயனர்களின் தகவல்களை தங்களுக்கு தாங்களே டவுன்லோட் செய்துகொள்ள முடியும்” என்று குறிப்பிடப் பட்டுள்ளது.

மேலும் “நாங்கள் வதந்திகளை மட்டுமே களைய செய்ய விரும்புகிறோம். உங்கள் தனிப்பட்ட தகவல்களை என்கிரிப்ஷன் கொண்டு பாதுகாக்கிறோம் என்பதில் 100% தெளிவாகுங்கள்” என்று அதில் குறிப்பிடப் பட்டுள்ளது. 

ALSO READ: ‘அந்த மனுசன் சொன்னது ஒன்னு... இவங்க புரிஞ்சுகிட்டது ஒன்னு!’ - வாட்ஸ் ஆப் பிரைவேசி பாலிசி எதிரொலி!.. ‘எலன் மஸ்க்’ ட்வீட்டை அடுத்து நடந்த ‘வேடிக்கை’!

இன்னொருபுறம் வாட்ஸ் ஆப் பிரவேசி பாலிசி எனப்படும் தனியுரிமைக் கொள்கைக்கு எதிராக பலரும் கருத்துக்கள் பதிவிட்டு வருகின்றனர். சிக்னல், டெலிகிராம் போன்ற மாற்று செயலிகளையும் பற்றி பேச்சுகள் எழுந்துள்ளன.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்