"இனிமே இத டவுன்லோடு பண்ணாதீங்க.." 'Whatsapp' பயனர்களுக்கு 'CEO' விடுத்த எச்சரிக்கை.. பரபரப்பை கிளப்பிய 'ட்வீட்'!!
முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்ஆண்ட்ராய்டு மொபைல் போனில் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தி வரும் பயனாளர்களுக்கு அந்நிறுவனத்தின் சிஇஓ எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
Also Read | அறிமுகம் ஆனது நத்திங் போன் (1).. வியக்க வைக்கும் சிறப்பம்சங்கள்.. உற்சாகத்தில் வாடிக்கையாளர்கள்
வாட்ஸ்அப் செயலியை உலகம் முழுவதிலும் கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதில் உள்ள அசத்தலான அப்டேட்கள், சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளிட்ட ஏராளமான சிறப்பம்சங்கள், இதன் வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
அந்த வகையில், இந்த நிறுவனத்தின் சிஇஓ ஆன Will Cathcart, தற்போது வாட்ஸ்அப் பயனாளர்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
வாட்ஸ்அப் சிஇஓ விடுத்த எச்சரிக்கை
இது தொடர்பாக, வில் கேத்கார்ட் வெளியிட்டுள்ள நீண்ட ட்விட்டர் பதிவு ஒன்றில், "பயனாளர்கள் சிக்கலில் சிக்கக் கூடும் என்பதால், மாற்றியமைக்கப்பட்ட வாட்ஸ்அப் செயலியை யாரும் பயன்படுத்த வேண்டாம். வாட்ஸ்அப் சேவைகளை வழங்குவதாக கூறி, சில தீங்கு இழைக்கும் செயலிகளை எங்களின் பாதுகாப்பு ஆய்வுக் குழு கண்டறிந்துள்ளது. Heymods என்ற டெவலப்பரின் Hey Whatsapp போன்ற செயலிகள் போலி ஆனது மட்டுமில்லாமல், பயனாளர்களுக்கு ஆபத்தான ஒன்றாக இருக்கும்.
நடவடிக்கை எடுத்துட்டு வரோம்
இது போன்ற செயலிகள், உங்களுக்கு புதிய அம்சங்களை வழங்குவதாக கூறி, உங்களது போனில் உள்ள தனிப்பட்ட தகவலை திருடும் ஒரு மோசடி செயலி ஆகும். இது போன்ற போலியான பதிப்புகள், வாட்ஸ்அப் வழங்கும் சேவையை வழங்கக் கூடியது என்றாலும், வாட்ஸ்அப் அசல் பதிப்பில் நீங்கள் பெறும் End to End encryption வசதியை உங்களால் பெற முடியாது.
இது உங்கள் சாட்களை தனிப்பட்ட முறையில் பாதுக்காக்க உதவுகிறது. வாட்ஸ்அப் கூட உங்களின் விவரங்களை அணுக முடியாது. வாட்ஸ்அப்பின் போலி பதிப்பு, பிளே ஸ்டோரில் இல்லை. அதனை வேறு இடங்களில் இருந்து எடுக்கும் போது, கவனமாக கையாள வேண்டும். வரும் காலத்தில் இதன் மூலம் ஏற்படும் தீங்கைத் தடுக்க, HeyMods-க்கு எதிராக சட்ட நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறோம்" என வில் கேத்கார்ட் குறிப்பிட்டுள்ளார்.
Also Read | "Dealing எல்லாம் இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக்'ல தான்.." இளைஞர்கள் செய்து வந்த காரியம்.. பரபரப்பில் மதுரை
மற்ற செய்திகள்
"Dealing எல்லாம் இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக்'ல தான்.." இளைஞர்கள் செய்து வந்த காரியம்.. பரபரப்பில் மதுரை
தொடர்புடைய செய்திகள்
- "9 வருஷத்துக்கு முன்னாடியே ரஷ்யா அதை பண்ணிடுச்சு".. குண்டைத் தூக்கிப் போட்ட டெலிகிராம் ஓனர்..!
- ‘பிரபல செயலியைப் பயன்படுத்தும்போது’.. ‘தானாக இயங்கிய செல்ஃபோன் கேமரா’.. ‘அதிர்ச்சியில் பயனாளர்கள்’..
- ‘இனி மற்ற நெட்வொர்க் போன்களுக்கு’.. ‘அழைத்துப் பேசினால் கட்டணம்’.. ‘பிரபல நிறுவனத்தின் புதிய அறிவிப்பு’..
- ‘இனி இது ரொம்ப ஈஸி’.. ‘வாட்ஸ்அப்பின் புதிய அப்டேட்டால்’.. ‘உற்சாகத்தில் பயனாளர்கள்’..