'பாஸ்வேர்ட் தெரிஞ்சா என்ன'?... 'வேற யாரும் 'வாட்ஸ்அப் மெசேஜ்' பாக்க முடியாது... அதிரடி அப்டேட்!
முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்தகவல் தொடர்பிற்கு செல்போன் எவ்வளவு இன்றியமையாத ஒன்றாகி போனதோ, அது போன்று வாட்ஸ்அப் தற்போது மாறிவிட்டது. உலக அளவில் பல கோடி மக்கள் உபயோகப்படுத்தும் இந்த அப்ளிகேஷனை ஃபேஸ்புக் நிறுவனம் வாங்கியது. அதற்கு பின்பு அதில் பல அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அடுத்தடுத்து வரும் அப்டேட்கள் பயனாளர்களை கவரும் வகையில் அமைந்துள்ளன.
அந்த வகையில் கடந்த ஜனவரி மாதம் வாட்ஸ் அப் நிறுவனம் முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில் பயனாளர்களின் தகவல் பரிமாற்றங்களில் பாதுகாப்பை அதிகரிக்க ஃபிங்கர் பிரிண்ட்டின் மூலமாக வாட்ஸ் அப்பிற்குள் நுழையும் வசதி கொண்டுவரப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன் படி இந்தப் புதிய அம்சம் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் சோதிக்கப்பட்டு, ஆண்ட்ராய்டு பீட்டா வெர்ஷன் 2.19.221ல் நடைமுறைக்கு வந்துள்ளது.
அப்டேட் செய்யப்பட்ட வாட்ஸ் அப்பில் உள்ள, அக்கவுண்ட் ஆப்ஷனுக்கு சென்று அதிலுள்ள பிரைவேசி ஆப்ஷனை கிளிக் செய்தால் FINGER PRINT LOCK என்ற வசதி கொடுக்கப்பட்டுள்ளது அதனை ஆன் செய்தால் கை ரேகை கேட்கும். பயனாளர் தங்கள் கைரேகையை கொடுக்க அனுமதித்தால் வாட்ஸ் அப் லாக் ஆகிவிடும். அதன்பிறகு வாட்ஸ் அப்பை திறக்க பயனர்களின் கைரேகை அவசியம்.
இந்த புதிய வசதி பயனாளர்கள் தங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய உதவும் என வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது. அதே போன்று நாம் ஒருவருக்கு ஃபார்வேர்டு செய்யும் செய்தி எத்தனையாவது முறையாக பரிமாறப்பட்டுள்ளது என்ற ஆப்ஷனும் அப்டேட் செய்யப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- இனிமேல் இதெல்லாம் ‘வாட்ஸ்அப்பிலும்’ பண்ணலாம்.. ‘ஃபன் ஃபீட்சரால் உற்சாகத்தில் பயனாளர்கள்..’
- 'நம்புங்க அவர் என்னோட ஜூனியர்'... 'நெகிழ செய்த 'டாடியின் லிட்டில் பிரின்சஸ்'... வைரலாகும் பதிவு!
- 'ஒண்ணு சேர்த்த பேஸ்ஃபுக்'...'பெத்தவங்க சொன்ன அந்த ஒரு வார்த்தை'... 'திருமணத்தில் முடிந்த காதல்'!
- ‘வாட்ஸ்அப்பால் நடந்த விபரீதம்’.. ‘கொசு மருந்தைக் கொடுத்து..’ கணவன் செய்த பயங்கரம்..
- 'ரெண்டு பொண்ணுங்க ஆடுனா தப்பா?'... 'சென்னை பப்'பில் நடந்த பரபரப்பு'... வைரலாகும் பெண்ணின் பதிவு!
- 'நான் பேச மாட்டேன்'... 'இந்த துப்பாக்கி தான் பேசும்'.... 'வாட்ஸ்அப்'பில் மிரட்டல்'... வைரலாகும் வீடியோ!
- வாட்ஸ் அப் பயனாளர்களுக்கு காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி..! வரப்போகும் புதிய அப்டேட்..!
- ‘மொபைல் வேண்டாம், இது மட்டும் போதும்’... ‘வாட்ஸ் அப்’பில் புதிய வசதி’!
- 'வாட்.. நானா? யார்ரா இந்த வேலைய பாத்தது'.. தூங்கி எழுவதற்குள் வாட்ஸ்-ஆப்பில் நடந்த விபரீதம்!
- 'புள்ள ஹாஸ்டல்ல தானே இருக்கா'...'படிக்க போன இடத்துல 'லிவிங் டுகெதர்'...'மாணவிக்கு நேர்ந்த பயங்கரம்'!