'வாட்ஸ் அப்-ல இதெல்லாம் இனி செய்ய முடியாது!'... வாட்ஸ் அப் நிறுவனம் அதிரடி நடவடிக்கை!

முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்
By |

வாட்ஸ்அப்பில் தகவல்களை பகிர புதிய கட்டுப்பாடுகளை விதிக்க வாட்ஸ்அப் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில்,கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பாக வதந்திகளும், பொய்செய்திகளும் வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வேகமாக பரப்பப்படுகின்றன.

அதாவது, வழக்கமாக ஃபார்வேர்ட் செய்யப்படும் தகவல்கள் ஒரே நேரத்தில் 5 பேருக்கு அனுப்ப முடியும். ஆனால், புது கட்டுப்பாடுகளின்படி, ஒரே நேரத்தில் ஒருவருக்கு மட்டுமே ஃபார்வேர்ட் செய்ய முடியும். இதன் மூலம், போலி செய்திகள், வதந்திகள் பரவுவதை கட்டுப்படுத்த முடியும் என்று வாட்ஸ் அப் தெரிவித்துள்ளது.

புதிதாக அனுப்பப்படும் தகவல்கள் ஒரே நேரத்தில் 5 பேருக்கு அனுப்பலாம். ஆனால், மற்றவர்கள் ஃபார்வேர்ட் செய்த தகவலை மீண்டும் பலருக்கு ஃபார்வேர்ட் செய்யும்போதுதான் புது நிபந்தனை கட்டுப்படுத்தும்.

ஏற்கெனவே, பலருக்கு ஒரே நேரத்தில் ஃபார்வேர்ட் செய்யும் வசதியை கட்டுப்படுத்தி, ஒரே நேரத்தில் 5 பேருக்கு மட்டுமே ஃபார்வேர்ட் செய்யும் வசதி கொண்டு வந்த பிறகு, ஃபார்வேர்ட் செய்யும் தகவல்களின் போக்கு 25 % குறைந்தது குறிப்பிடத்தக்கது.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்