இ-மெயில் மூலம் பரவும் வைரஸ்...'உங்க பணத்தை பத்ரமா பாத்துக்கோங்க...'!

முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்
By |

மத்திய அரசு புதிதாக ஆன்லைன் ‘வைரஸ்’ ஒன்று குறித்து எச்சரிக்கை கொடுத்துள்ளது. இ-மெயில் வழியாக இந்த வைரஸ் பரவுவதை மத்திய (CERT) அமைப்பு கண்டறிந்துள்ளது.

Advertising
>
Advertising

 

கம்ப்யூட்டர்கள் வழியாக பரவும் இந்த வைரஸ்-க்கு Diavol எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த குறிப்பாக விண்டோஸ் கம்ப்யூட்டர்களைக் குறி வைத்துத் தாக்குகிறதாம். இந்த வைரஸ் முதலில் இ-மெயில் மார்க்கமாக விண்டோஸ்-க்குள் நுழைந்து பின்னர் கம்ப்யூட்டரை மொத்தமாக அணைத்து விடுகிறதாம். பின்னர் அந்த விண்டோஸ் ஓப்பன் ஆகாமல் ஓப்பன் ஆவதற்கு பணம் கேட்குமாம்.

இந்த Diavol வைரஸ் முதலில் ஒட்டுமொத்த விண்டோஸ் தளத்தையும் முடக்கி உங்களிடம் பணம் கேட்குமாம். அல்லது உங்களுக்குத் தேவைப்படும் முக்கியமான ஃபைல்களை மட்டும் முடக்கி வைத்துவிட்டு அதன் பின்னர் மிரட்டி பணம் கேட்குமாம். இதுகுறித்த எச்சரிக்கையை தற்போது மத்திய அரசு வெளியிட்டு உள்ளது.

இந்த வைரஸ் பாதித்துவிட்டால் தேவைப்படும் பணத்தை ‘பிட்காயின்’ வழியாக மட்டுமே பயனாளர்கள் கொடுக்க வேண்டும் என மிரட்டுவதாகக் கூறப்படுகிறது. பயனாளர் பணம் தராவிட்டால் பாதிக்கப்பட்ட கம்ப்யூட்டர் உரிமையாளரால் அவரது ஃபைல்களை டெலிட் செய்துவிடுகிறதாம். சில சமயம் அந்த ஒட்டுமொத்த கம்ப்யூட்டரே பயன் இல்லாமல் போய்விடுகிறது என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இ-மெயில் வழியாக இந்த வைரஸ் ஒருவருக்கு அனுப்பப்படுகிறது. அதன் உடன் OneDrive-க்கான லிங்க் ஒன்றும் கொடுக்கப்படுகிறது. அதை பயனாளர் டவுன்லோடு செய்து பார்க்கும் வகையில் அந்த மெயில் இருக்கும். அதில் இருக்கும் LNK ஃபைல் மூலமாக மால்வேர் உங்கள் கம்ப்யூட்டருக்குள் புகுந்துவிடுகிறதாம்.

இந்த வைரஸ் மற்றும் இது போன்ற வைரஸ் பாதிப்புகளில் இருந்து தப்பிக்க நீங்கள் செய்ய வேண்டியது ஒன்று தான். உங்களது சாஃப்ட்வேர்களை அடிக்கடி அப்டேட் செய்துகொள்ளுங்கள். உங்களது OS அடிக்கடி அப்டேட் செய்யப்பட வேண்டியது அவசியம். வருகிற அல்லது அனுப்பப்படுகிற அத்தனை இ-மெயில்களையும் டிடெக்ட் மற்றும் ஃபில்டர் செய்யுங்கள். ஏதாவது threat காண்பிக்கிறதா என்பதைப் பாருங்கள்.

கம்ப்யூட்டரில் எந்தவொரு டவுன்லோடு அல்லது இன்ஸ்டால் செய்ய வேண்டும் என்றாலும் users’ permissions வேண்டும் என்பது போல் செட்டிங் வைத்துக் கொள்ளுங்கள். தெரியாத IP address-களை முடக்கும்படி உங்களது firewall இருக்க வேண்டும் என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள்.

TECHIE, VIRUS ATTACK, VIRUS WARNING, VIRUS EMAIL, இமெயில் வைரஸ், பணம் பத்திரம்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்