'வாய்ஸ்' காலுக்கு 67%.. 'டேட்டா'வுக்கு 20% 'கட்டண' உயர்வு.. இனி 'பாத்து' தான் செலவு பண்ணனும்!
முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்ஏர்டெல், வோடபோன் நிறுவனங்கள் தங்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்தால் வரும் டிசம்பர் 1-ம் தேதி முதல் கட்டணத்தை உயர்த்த போவதாக அறிவித்துள்ளன. இதற்கு இடையில் ஏர்டெல், வோடபோன், ஜியோ நிறுவனங்கள் தங்களுக்கு செலுத்த வேண்டிய 42 ஆயிரம் கோடியை செலுத்துவதற்கு, மத்திய அரசு 2 ஆண்டுகள் வரை அவகாசம் அளித்துள்ளது.
இதனால் ஏர்டெல், ஜியோ, வோடபோன் நிறுவனங்கள் கட்டண உயர்வை கைவிடுமா? என்ற எண்ணம் வாடிக்கையாளர்கள் மனதில் தோன்ற ஆரம்பித்துள்ளது.
இந்தநிலையில் வாய்ஸ் கால்களுக்கு 67% கட்டணமும், டேட்டாவுக்கு 20% கட்டணமும் உயர்த்தப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் இனி மலிவான இலவச அழைப்புகளுக்கும் டேட்டாக்களுக்கும் முடிவு வந்துவிட்டதாகவே கருதப்படுகிறது. டிராய் மதிப்பீட்டின்படி கடந்த 2015-ம் ஆண்டு 226 ரூபாய் செலவானதாக கூறப்படுகிறது. ஜியோவின் வருகையால் டேட்டாவின் விலை சந்தையில் மிகவும் குறைந்துள்ளது.
கட்டண உயர்வுகள் அமலுக்கு வரும்போது டிராய் வாய்ஸ் கால்களுக்கு 1 நிமிடத்திற்கு 10 பைசா என்றளவில் நிர்ணயிக்கலாம் என கூறப்படுகிறது. இது ஐயுசி கட்டணத்தை விட 67% அதிகம் ஆகும். இதேபோல டேட்டா தரவுகள் 1 ஜிபிக்கு 3 ரூபாய் என்றளவில் விலை அதிகரிக்கலாம் என கூறப்படுகிறது. இது முந்தைய விலைகளை ஒப்பிடும்போது 20% வரை அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளன.
அதேபோல குறைந்த விலை ரீசார்ஜ்களின் கட்டணம் 40% அதிகரிக்கக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது ஸ்மார்ட் ரீசார்ஜ் என அழைக்கப்படும் ஏர்டெல்லின் குறைந்தபட்ச ரீசார்ஜ் திட்டம் 23 ரூபாய்க்கு கிடைக்கிறது. இது ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் செல்லுபடியை 28 நாட்களுக்கு நீடித்து வழங்கி வருகிறது.வோடபோனிலும் இந்த கட்டணம் 24 ரூபாயாயாக உள்ளது. ஆனால் ஜியோவில் இந்த கட்டணம் 59 ரூபாயாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- இந்தியாவுல 4ஜி 'மட்டும்' தான் இருக்கணும்.. மக்களே 'முடிவு' பண்ணட்டும்.. செம சண்டை!
- ஏர்டெல், ஜியோ, வோடபோனுக்கு '2 வருடங்கள்' அவகாசம்.. கட்டண 'உயர்வு' முடிவுக்கு வருமா?
- வெறும் '7 ரூபாய்க்கு' 1 ஜிபி டேட்டா.. 'பிரபல' நெட்வொர்க்கின் அதிரடி ஆபர்!
- கட்டண 'உயர்வு' போட்டியில்.. 'ஜியோ'வும் இறங்கலாம்.. 30-40% உயர்த்த திட்டம்!
- ஏர்டெல், வோடபோன் 'கட்டணங்கள்' திடீர் உயர்வு.. டிசம்பர் 1 முதல் 'அமலுக்கு' வருகிறது!
- முடிவுக்கு வரும் ஐயுசி கட்டணம்?.. இனி தனியாக 'ரீசார்ஜ்' செய்ய தேவையில்லை!
- நாங்களும் 'போட்டிக்கு' வருவோம்.. தினசரி '3 ஜிபி' டேட்டா.. வரம்பற்ற அழைப்புகள்.. 'ஜியோ'க்கு சரியான போட்டி!
- திரும்ப 'வந்துட்டேன்னு' சொல்லு.. ஜியோ அளித்த செம 'ஆபர்'.. வாடிக்கையாளர்கள் 'ஹேப்பி' அண்ணாச்சி!
- ‘ஒரே பிளானில் இத்தனை ஆஃபரா! ’.. ‘பிரபல நிறுவனம் வெளியிட்டுள்ள அசத்தல் அறிவிப்பு’..
- 'ஜியோவ' கடுப்பேத்துறதே வேலையா போச்சு.. 39 ரூபாய்க்கு செம 'வொர்த்தான' திட்டம்!